Type Here to Get Search Results !

Translate

நந்திகேசனை ஏன் பூஜிக்க வேண்டும் ?

நந்திகேசனை ஏன் பூஜிக்க வேண்டும் ?

 நந்திகேசனை ஏன் பூஜிக்க வேண்டும் ?


வேளாண்மை விளைச்சலை அபிவிருத்தி செய்ய நந்தி கேசனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்பது ஆசாரிய விதி.

காளையை பூஜை செய்தால் விளைச்சல் எப்படி அதிகரிக்கும் என்ற சந்தேகம் இயல்பானது. நிலத்தில் உழைப்பதுக்குப் பதில் பூஜை செய்தால் போதுமா என்று கேட்பவரும் உண்டு "எலும்பு முறிய வேலை செய்தால் பல் முறிய உண்ண லாம்" என்ற மூதுரையை நம்பி வாழ்பவன் தானே உழவன். யான்ேறமுைதுரையில்

காளையை தருமத்தின் சின்னமாகக் கருதுவதன் காரணமே அதன் கடின உழைப்பு.

நெல் விளைந்து அறுவடை செய்ததும் சத்தான நெல்லை நாம் எடுத்துக் கொண்டு கழிவுப்பொருளான வைக்கோலைக் காளைக்குக் கொடுக்கின்றோம். மறுபடியும் அதன் கழிவுப் பொருளான சாணம் முதலியவற்றை நிலத்துக்கே உரமாகத் தருகின்றது.

க காளைக்குப் பதிலாக டிராக்டர் உபயோ - கிக்கும் போது வேலை சுலபமாக முடியும். விரைவிலும் நடக்கும் ஆனால் தருமம் நிலை நிற்கவில்லையே? உழவைச்செய்யும் டிராக்டரின் கழிவுப்பொருட்கள் நிலத்துக்கும் உழவருக்கும் தீங்கானவை.வேறு எருக்களை நம்பியிருப்பதால் நிலமும் காலப்போக்கில் வேளாண்மைக்கு ஒவ்வாத நிலமாக மாறும்.

இந்த தருமத்தை நிலை நிறுத்தவே வேளாண்மை செழிக்க நந்திகேசரை பூஜை வாயிலாக காளையை மதிக்க வேண்டும் என்பது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad