காலையில் கஞ்சியும் நெய்யும் அருந்துவதன் மேன்மை என்ன..?
நம் நாட்டில், அதிகாலையில் கஞ்சியும் நெய்யும் அருந்தும் வழக்கமிருந்தது. பண்டைக் காலத்தில் நவீன உணவு முறைகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகள் இன்றைய தலைமுறை பழக்கப்படுத்தி வருவதால், கஞ்சி நெய், கீரை, பயிறு வகைகள் என்பவைக்கு இடமில்லாமல் போய்விட்டது. காலை உணவுக்கு கஞ்சியும் நெய்யும் அருந்தியிருந்தவர்கள் அதன் கூடவே கீரை வகைகள், பயிறு வகைகள் முதலியவையும் சேர்த்திருந்தனர்.
சரிவிகித உணவாக அமைந்ததாலே, அன்றைய மக்கள் இவ்வகை உணவைப் பழக்கப்படுத்தியிருந்தனர். கஞ்சியிலிருக்கும் தாராளமான நீர் நமது இரத்தத்தில் கட்டியிருக்கும் விஷ அம்சத்தையும் அசுத்தங்களையும் முற்றிலும் அகற்றி விட உதவுகின்றது. மேலும் இவ்வுணவிலடங்கியிருக்கும் வைடமின்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க உதவும். நெய்யிலிருந்து தேவையான ஃபாஸ்பரஸ் மற்றும் கொழுப்பு கிடைக்கின்றது. பயிறு வகையிலிருந்து புரத சத்தும் கீரைகளிலிருந்து வைடமினும் கிடைக்கும். கஞ்சியின் சோறு நம் உடலுக்குத் தேவைப்படும் கார்போ ஹைட்ரெய்ட்டும் அளிக்கின்றது.