![]() |
ஊழ்வினை தோஷம் , கர்ம வினை |
- தெரிந்தும் தெரியாமல் செய்த அனைத்து வித பாவ கர்மங்களையும் , பித்ரு சாபங்களையும், ஊழ்வினை தோஷத்தையும் நீக்கி சாப விமோசனம் தரும் ஆலயம்...
- தலைமுறை தலைமுறையாக வரும் ஊழ்வினை சாபங்கள் நீக்கும் ஆலயம்.
- பிறந்ததில் இருந்து அனைத்துவித கஷ்டங்களும், வேதனைகளும், நோய்களால் பதிக்கப்பட்வர்களும், வேதனை படும் நம் நண்பர்களுக்காக இந்த கட்டுரை...
" விளம்பரம் :- { சங்ககால முறையில் மிகத் துல்லியமாக ஜோதிடம் பார்த்து சரியான முறையில் மூன்று மாதத்தில் அனைத்து வித பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கப்படும். ஜோதிடம் பார்க்கவும் இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்ய தொடர்பு கொள்ள +917904599321 - இஎஸ்.நக்கீரன் } "
- கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் முன்னேற முடியாமல் தவிக்கும் நடுத்தர பாமர மக்களுக்காக இந்த கட்டுரை...
- எவ்வளவு பக்தியாக இருந்தாலும், விரதங்கள் பல அனுஷ்டித்தும் , கோவில் கோவிலாக அடைந்தாலும், பூஜைகள் பல செய்தும் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாதவர்களுக்கு இந்த கட்டுரை..
- மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் உள்ளவர்கள் ஊழ்வினை கர்மாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்....
- இவர்கள் சரியான ஜோதிடரை அனுகி அவர்களுக்கான ஜோதிட ஆய்வு செய்து பிரச்சினைகளுக்கான தீர்வு தெரிந்து கொண்டு அதன் பிறகு இந்த ஆலயம் வர வேண்டும்
- திரிவேணி சங்கமத்தில் அமைந்த தலம்.
- பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கும் தனித்தனி சந்நிதிகள் கொண்ட கோயில்.
- பிற்காலப் பாண்டியர்கள் எழுப்பிய ஆலயம், முழுவதும் கருங்கல்லினால் அமைந்த திருக்கோயில்.
- ஆதிசங்கரர் வழிபட்ட தலம்,
" விளம்பரம் :- { சங்ககால முறையில் மிகத் துல்லியமாக ஜோதிடம் பார்த்து சரியான முறையில் மூன்று மாதத்தில் அனைத்து வித பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கப்படும். ஜோதிடம் பார்க்கவும் இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்ய தொடர்பு கொள்ள +917904599321 - இஎஸ்.நக்கீரன் }
"
- முன்னோர்கள் முக்திக்கான பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள, திருவல்லம் பரசுராமர் திருக்கோயில்.
- கர்மனாறு, கிள்ளியாறு, பார்வதிபுரத்தாறு -என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
![]() |
கர்ம வினை நீங்க |
- வல்லம் என்பதற்குத் தலை என்ற பொருள் கூறப்படுகிறது. அந்தவகையில், அனந்தபத்மநாப சுவாமிக்குத் தலைப்பகுதியாகத் திருவல்லம் திகழ்கின்றது. அனந்தகாடு எனும் திருவனந்தபுரம் உடலாகவும், திருப்பாதபுரம் என்பது பாதமாகவும் போற்றப்படுகிறது
- பரசு என்பதற்கு கோடாலி என்பது பொருள். கடுந்தவத்தினால் சிவபெருமானிடம் கோடாலி பெற்றவர் பரசுராமர். இவர், தன் கோடாலியால் மேற்குக் கடற்கரையில் உருவாக்கிய தேசமே கேரளா.
இவர் குறித்த புராணக் கதை:
- ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா, கற்புக்கரசியான இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. கங்கைக் கரையோரம் வசித்து வந்த இவர், நாள்தோறும் கங்கையில் நீராடி, மண் எடுத்து பானை செய்து, அதில் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். ஒரு சமயம், இவ்வாறு கங்கைக்குச் சென்றபோது, தண்ணீரில் அழகிய ஆண்மகனின் உருவம் தெரிய, அவன் அழகில் நிலை தடுமாறினாள். மன மயக்கத்தில் பானை செய்ய முடியாமல் தவித்தாள். அனைத்தையும் குறிப்பால் உணர்ந்த முனிவர், அவளின் மீது கோபங்கொண்டார். தன் புதல்வர்களை அழைத்து, அவளை வெட்டி விட்டு வரும்படி ஆணையிட்டார்.
- நான்கு புதல்வர்கள் மறுக்க, ஐந்தாவது மகனான பரசுராமன் தன் தாயின் தலையை கோடாலியால் வெட்டி, தந்தைக்குச் சமர்ப்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த முனிவர், வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பரசுராமர் தன் தாயை மீண்டும் உயிர்ப்பித்துத் தரவேண்டும் என்றார். பரசுராமனின் தாயன்பைக் கண்டு பெருமை கொண்டு, அதன்படியே ரேணுகா உயிர்ப்பெற்றாள் என புராணம் கூறுகிறது.
- தாய் மீதும், தந்தை மீதும் அளவற்ற அன்பு கொண்ட பரசுராமர், அட்சயதிரிதியை அன்று அவதரித்தார். இவரது கதை ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் கூறப்படுகிறது. கொங்கன் பிரதேசம், பரசுராமரின் தலமாக இன்றும் போற்றப்படுகிறது
" விளம்பரம் :- { சங்ககால முறையில் மிகத் துல்லியமாக ஜோதிடம் பார்த்து சரியான முறையில் மூன்று மாதத்தில் அனைத்து வித பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கப்படும். ஜோதிடம் பார்க்கவும் இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்ய தொடர்பு கொள்ள +917904599321 - இஎஸ்.நக்கீரன் } "
- பரசுராமருக்கென கேரள மாநிலத்தில் அமைந்த தனிச்சிறப்பு கொண்ட திருக்கோயிலாக இது அமைந்துள்ளது. இதுதவிர, அருணாசல பிரதேசத்தில் லோகித் மாவட்டத்தில், பரசுராமர் குண்ட் என்ற தலம் அமைந்துள்ளது. சென்னையில் பரசுராமேஸ்வரர் திருக்கோயில், அயனாவரத்தில் அமைந்துள்ளது.
- திருவல்லத்தில் உள்ள இவ்வாலயம், பிற்காலப் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. ஆலயம் முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்திருக்கோயிலின் தொன்மையைக் கருத்தில்கொண்டு, தொல்லியல்துறை பராமரித்து வருகின்றது. கிழக்கு, வடக்கு என இருவாயில்களும், இரு கொடிம ரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு வாசலில் சிவபெருமான், வடக்கு வாசலில் பரசுராமர் சந்நிதிகள் அமைந்துள்ளன
- பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் வாழும் ஆலயமாக இது திகழ்கின்றது. விநாயகர், முருகர், கிருஷ்ணன், பத்ரகாளி, வியாச முனிவர், மத்திய முனிவர், நாகர்கள் சந்நிதிகளும் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளன.
- பரசுராமர் வடக்கு முகமாக அனந்தபத்மநாப சுவாமியின் ஆலயத்தினை நோக்கி நின்ற கோலத்தில் எழிலாகக் காட்சி தருகிறார். அலங்காரத்தில் உயிரோட்டமாக நமக்கு காட்சிதருவது மெய்சிலிர்க்க வைக்கின்றது. இத்திருக்கோயிலில், பரசுராமரின் பாதம் வணங்கப்படுகிறது. இதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றது
- பூஜையில் கலந்து கொள்பவர்கள் ஒரு நாளைக்கு முன்போ அல்லது பூஜை செய்யும் நாளிளோ 1 மணி நேரத்திற்கு முன்பு ஆலயத்திற்கு வந்து விட வேண்டும்.
- பூஜைக்கு உண்டான பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கடையில் வாங்கிக் கொள்ளவும். பூஜைக்கு உண்டான கட்டணத்தை செலுத்த வேண்டும்... தில எள் ஹோமத்திற்கு உண்டான ரசீது மற்றும் பரசுராமருக்கு அர்ச்சனை செய்யும் ரசீதையும் முன்கூட்டியே வாங்கி கொள்ளவும்.
- பெயர் வரிசையின் படி பூஜைக்கு உண்டான நபர்களை கூப்பிட்டு பரிகாரம் செய்யும் இடத்தில் அமர வைப்பார்கள்.. எல்லா வழிமுறைகளையும் அவர்கள் கூடவே இருந்து சொல்லிக் கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்
![]() |
ஊழ்வினை-பித்ரு-சாபநிவர்ததி பூஜை |
- . அதன் பிறகு அதில் உள்ள பிண்டத்தை எடுத்து 9 பலி பீடத்திற்கு வைத்துவிட்டு மீதி உள்ள பூஜை செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு திரிவேணி சங்கமத்தில் நின்றுகொண்டு முதுகிற்கு மேல் தூக்கி ஆற்றில் எறிந்து விட்டு கால் கைகளை அலம்பிக்கொண்டு கோவிலுக்குள் வரவேண்டும்.
![]() |
கர்ம வினை நீங்க |
- அதன்பிறகு தில எள் ஹோமம் நம்முடைய வீட்டு விலாசம் சொல்லி நம்முடைய பெயரில் ஹோமம் வளர்த்து மை கொடுப்பார்கள். அவை சிறிது நம் நெற்றியில் வைத்துக் கொண்டு மீதமுள்ளதை நம் வீட்டு வாசற கதவில் பூசி விடவேண்டும்.
- தில எள் ஹோமம் செய்த பிறகு பரசுராமர் ஆலயத்தில் நம் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
- திருவனந்தபுரம்-கோவளம் வழித்தடத்தில், திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருவல்லம் ஊரில் இக்கோயில் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருவல்லம் உள்ளது.
" விளம்பரம் :- { சங்ககால முறையில் மிகத் துல்லியமாக ஜோதிடம் பார்த்து சரியான முறையில் மூன்று மாதத்தில் அனைத்து வித பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கப்படும். ஜோதிடம் பார்க்கவும் இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்ய தொடர்பு கொள்ள +917904599321 - இஎஸ்.நக்கீரன் } "
/div>