தியானம் நம் வாழ்க்கைக்கு பயனளிப்பது எப்படி?
தியானம் வாழ்க்கைக்கு பயனளிக்கும் என்று பழைய தலைமுறை நம்மை கற்பித்திரு க்கின்றது.
சாந்தமாயிருந்து ஒரே சிந்தனையுடன் தன்னிலும் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் குடிகொள்ளும் ஜீவசக்தி இறைவன் அருளும் சக்தி என்று மனதில் கொண்டுள்ள ஆராதனையே தியானம்.
போது நிகழ்விமிககு யுகங்கள் கழியும் போது நிகழவிருக்கும் மனதின் சுத்திகரிப்பு இந்த ஜன்மத்திலேயே பரிணமிக்கும் சாதனையென்று தியானத்தை சிறப்பிக்கலாம்.
தியானத்தின் பயன்களை நவீன அறிவியல் அங்கீகரித்துள்ளது. மனதுக்கும் புத்திக்கும் சக்தி பெற ஒரே ஒரு பாதை மட்டுமே நவீன விஞ்ஞானம் உபதேசிக்கின்றது. அது தியானத்தின்பாதை. மனதை ஒரு நிலைப் படுத்தி ஒரு தனிப்பட்ட புள்ளியில் மையப்படுத்தி தியானம் செய்தால் மனதை அலட்டும் எல்லா சிந்தனைகளிலிருந்தும் விடுதலை பெறலாம்.
தியானத்தின் ஆழமான நிலையில் செல்லும் போது மூளையிலுள்ள பீடா அலைகள், ஆல்ஃபா, காமா, டெல்டா, தீடா என்ற அலைகளாக மாறுதலைடைகின்றன. என்று அறிவியல் கற்பிக்கின்றது. இவ்வலைகட்கு மூளையை அனேகம் மடங்கு விருத்தியடைந்து செயல் படச் செய்யும் என்பது ஈஈஜி ஆராய்ச்சி வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் தங்கள் மருத்துவ நூல்களில்தியானத்திற்குத் தகுந்த இடமளி த்துள்ளன.