பொன்னொளிர் தெய்வ தியானம்
இந்த பகுதி மற்றும் அடுத்த பகுதிகள் இறைவனை நேரடியாகத் தியானிப்பதுபற்றி கூறுகிறோம். இந்த தியானங்கள் ஜ்யோதிஷ்டோம யாகத்தின் அங்கங்கள் ஆகும். இவை அதிதைவதமாகவும் அத்யாத்மமாகவும் செய்யப் படுகின்றன.
இந்த பகுதியில் இறைவனைச் சூரிய மண்டலத்தில் உறைகின்ற பொன்னொளிர் தெய்வமாகத் தியானிக்கின்ற அதிதைவத தியானத்தைப் பற்றி கூறுகிறது. இது முக்கியத் தியானம்.
இதற்கு அங்கமாக ஐந்து தியானத் தொகுதிகள் கூறப்படு கின்றன. இந்த அங்கத் தியானங்களுக்கு ஜோடிஜோடியாக தேவதைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். இவர்களில் ஒருவர் ஆதாரமாக இருப்பவர், மற்றவர் அவரைச் சார்ந்திருப் பவர்; இவ்வாறு இந்த இருவரும் இணைபிரியாதவர்கள். இணைபிரியாத இந்த இரட்டை தேவதையர், இதுபோலவே இணைபிரியாத இரண்டு பிரதீக ஜோடிகளில் ஏற்றி தியானிக்கப் படுகின்றனர். இந்தப் பிரதீக ஜோடிகளாக ரிக்-சாம மந்திரங்கள் மற்றும் ஸா-அம ஆகியவை கொள்ளப்படுகின்றன. இவ்வாறு ஐந்து ஜோடி தேவதைகள், இரண்டு ஜோடி பிரதீகங்களில் ஏற்றி தியானிக்கப்படுகின்றனர். இந்த அதிதைவத தியானத்தில் ஒரு முக்கியத் தியானமும், பத்து அங்கத் தியானங்களும் இடம் பெறுகின்றன.
அங்கத் தியானங்கள்
இந்தப் பூமியே ரிக் மந்திரம், அக்கினி ஸாம மந்திரம்; ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளது. எனவே ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.
பூமியே ‘ஸா', அக்கினி ‘அம'* இரண்டும் சேர்ந்தால் ஸாமம்.
10 அங்க தியானங்கள் இந்தப் பகுதியில் இடம்பெறுவதாகக் கண்டோம். இதில் முதல் தியானம் இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது.
பூமி மற்றும் அக்கினி தேவதைகள் ரிக் மற்றும் சாம வேதங்களிலும், 'ஸா' மற்றும் ‘அம’விலும் ஏற்றப்பட்டு செய்யப் படுகின்ற தியானம் இது. இது யாகத்தில் ஓதவும் இசைக்கவும் படுகின்ற ரிக் மற்றும் சாம மந்திரங்களைத் தூய்மைப்படுத்து வதற்கான தியானம் ஆகும்.
" விளம்பரம் :- { சங்ககால முறையில் மிகத் துல்லியமாக ஜோதிடம் பார்த்து சரியான முறையில் மூன்று மாதத்தில் அனைத்து வித பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கப்படும். ஜோதிடம் பார்க்கவும் இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்ய தொடர்பு கொள்ள +917904599321 - இஎஸ்.நக்கீரன் } "
இசையுடன் பாடப்படுகின்ற ரிக் மந்திரங்களே சாம மந்திரங்கள். எனவேதான் சாம மந்திரங்கள் ரிக் மந்திரங்களில் நிலைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகாயமே ரிக் மந்திரம், வாயு ஸாம மந்திரம் ; ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளது. எனவே ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப் படுகிறது.
ஆகாயமே ‘ஸா', வாயு 'அம'
இரண்டும் சேர்ந்தால் சாமம்.
ஆகாயம் மற்றும் வாயு தேவதைகள் ரிக்-சாமவேதங் களிலும், 'ஸா'-'அம'விலும் ஏற்றப்பட்டு செய்யப்படுகின்ற தியானம் இது.
சொர்க்கமே ரிக் மந்திரம், சூரியன் ஸாம மந்திரம், ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளது. எனவே ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.
சொர்க்கமே ‘ஸா', சூரியன் ‘அம'; இரண்டும் சேர்ந்தால் சாமம்.
சொர்க்கம் மற்றும் சூரிய தேவதைகள் ரிக்-சாமவேதங் களிலும், 'ஸா'-'அம்'விலும் ஏற்றப்பட்டு செய்யப்படுகின்ற தியானம் இது.
நட்சத்திரங்களே ரிக் மந்திரங்கள், சந்திரன் ஸாம மந்திரங்கள், ஸாம மந்திரங்கள் ரிக் மந்திரங்களில் நிலைபெற்றுள்ளன. எனவே ஸாம மந்திரங்கள் ரிக் மந்திரங்களில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.
நட்சத்திரங்களே ‘ஸா', சந்திரன் ‘அம'; இரண்டும் சேர்ந்தால் சாமம்.
நட்சத்திரங்கள் மற்றும் சந்திர தேவதைகள் ரிக்-சாம வேதங்களிலும், 'ஸா'- 'அம'விலும் ஏற்றப்பட்டு செய்யப் படுகின்ற தியானம் இது.
சூரியனின் வெண்ணிற ஒளி ரிக் மந்திரம், அடர்ந்த கருநீலமாக இருக்கும் பகுதி ஸாம மந்திரம், ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளது. எனவே ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.
சூரியனின் வெண்ணிற ஒளியே ‘ஸா', நீலமாகவும் அடர்ந்த கறுப்பாகவும் இருக்கும் பகுதி ‘அம'; இரண்டும் சேர்ந்தால் சாமம்.
சூரியனின் வெண்ணிற ஒளி மற்றும் நீல, அடர்ந்த கறுப்புப் பகுதி தேவதைகள் ரிக்-சாமவேத மந்திரங் களிலும், ‘ஸா'-'அம’விலும் ஏற்றப்பட்டு செய்யப்படுகின்ற தியானம் இது.
" விளம்பரம் :- { சங்ககால முறையில் மிகத் துல்லியமாக ஜோதிடம் பார்த்து சரியான முறையில் மூன்று மாதத்தில் அனைத்து வித பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கப்படும். ஜோதிடம் பார்க்கவும் இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்ய தொடர்பு கொள்ள +917904599321 - இஎஸ்.நக்கீரன் } "
சூரியனில் அடர்ந்த கருநீலப் பகுதி இருப்பதாக இந்த மந்திரம் கூறுவது கருத்தில் கொள்ளத்தக்கது.' இது சாதாரணக் கண்களுக்குத் தெரிவதில்லை; புலன்களை அடக்கி மனத்தை
( சூரியனில் கறுப்புப் பகுதிகள் (sunspots) இருப்பதாக பின்னாளில் வான னஇயல் மேதைகள் கண்டு கூறினர். கி.மு.364-இல் சீன அறிஞர்கள் இந்தக் கறுப்புப் பகுதிகளைப்பற்றி அறிவித்தனர். வேத காலமோகி.மு.6000 என்று கூறப்படுகிறது. நமது ரிஷிகள் ஒருமைப்பட்ட மனத்தால் இவற்றைக் கண்டு கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது. )
*பொன்னொளிர் தெய்வ தியானம்*
வானில் தெரிகின்ற சூரியனில் பொன்னொளிர் தெய்வத்தின் காட்சி பெற்ற முனிவர் ஒருவர் தமது காட்சியைத் தெரிவிக்கின்ற பகுதி தியானத்திற்காக எடுத்துக்கொள்ளப் படுகிறது. அந்த தெய்வத்தின் தோற்றத்தை வர்ணித்துவிட்டு அவரை 6 தெய்வீகப் பண்புகளுடன் கூடியவராகத் தியானிக்கு மாறு அந்த முனிவர் கூறுகிறார்.
இப்போது பொன்னொளிர் தெய்வத்தைத் தியானிப்போம்: அவர் சூரியனில் தெரிகிறார். அவரது மீசையும் முடியும் எல்லாமே பொன்னெனத் திகழ்கின்றன. தலை முடிமுதல் கால் நகம் வரை அனைத்துமே பொன்னிறத்தில் ஒளிர்கின்றன.
பொன்னொளிர் தெய்வத்தின் மகிமைகளும் தியான பலனும்
அந்தப் பொன்னொளிர் தெய்வத்தின் கண்கள், சூரியனால் உதிக்கின்ற தாமரைபோல் உள்ளன. எல்லா தீமைகளையும் கடந்தவர் ஆதலால் அவர் ‘உத்' என்ற பெயரால் அறியப்படுகிறார். இவ்வாறு அறிந்து அவரைத் தியானிப்பவன் நிச்சயமாக எல்லா தீமைகளையும் கடக்கிறான்.
'உத்' என்றால் 'மேலே எழுவது' அல்லது 'கடப்பது'. அனைத்தையும் கடந்தவர் ஆதலால் பொன்னொளிர் தெய்வம் 'உத்' என்ற பெயரால் அறியப்படுகிறார்.
அந்தப் பொன்னொளிர் தெய்வத்திற்கு ரிக் தேவதையும் சாம தேவதையும் பகுதிகளாக உள்ளனர். எனவே அந்தத் தெய்வம் உத்கீதமாக உள்ளார். அவரது மகிமையைப் பாடுபவர் உத்காதா. அந்தத் தெய்வம் சூரிய மண்டலத்திற்கு மேலே உள்ள
உலகங்களையும், அங்கே உறைகின்ற தேவர்களின் ஆசை களையும் ஆள்கிறார். இது அதிதைவத தியானம்.
ரிக் தேவதை மற்றும் சாம தேவதையை உதாரணமாகக் கூறு வதன் மூலம் எல்லா தெய்வங்களும் பொன்னொளிர் தெய்வத் இன் அம்சங்களாக இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. எல்லா தெய்வங்களும் எந்த தெய்வத்தின் அம்சங்களோ அந்த முழு முதற் கடவுள் வேதாந்தத் தத்துவத்தில் 'ஹிரண்யகர்பன்' (பொன் னொளிர் தெய்வம்) என்று போற்றப்படுவது இங்கு நினைவுகூரத் தக்கது.
'உத்கீதம்' என்ற சொல் 'ஓங்கிய மகிமை படைத்தவர்' என்றும் பொருள்படுகிறது. எனவே பொன்னொளிர் தெய்வம் ஓங்கிய மகிமை படைத்தவராகப் போற்றப்படுகிறார்.
" விளம்பரம் :- { சங்ககால முறையில் மிகத் துல்லியமாக ஜோதிடம் பார்த்து சரியான முறையில் மூன்று மாதத்தில் அனைத்து வித பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கப்படும். ஜோதிடம் பார்க்கவும் இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்ய தொடர்பு கொள்ள +917904599321 - இஎஸ்.நக்கீரன் } "
மேலுலகங்களையும் அந்த உலகத்துடன் இணைந் துள்ள ஆசைகளையும் பொன்னொளிர் தெய்வம் ஆள்கிறார். அதாவது, தம்மைத் தியானிப்பவர்களுக்கு அவர் மேலுலகங் களையும் அந்த உலகின் இன்பங்களையும் வழங்குகிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறு சூரிய மண்டலத்தில் உறைகின்ற பொன் னொளிர் தெய்வத்தின்' அதிதைவத தியானம் செய்யப்படுகிறது.