கோயில் முற்றத்திற்குள் சென்றாலும் ஜீவசக்தி கிடைக்குமா?
கோயிலுக்குட்பாகம் செல்ல இயலாவிட்டாலும் வெளியிலாவது போய் வணங்கி வர வேண்டும் என்று ஆசாரியர் கூறுவதுண்டு.
தேர்வு எழுதவோ அல்லது வேறு ஏதாவது முக்கியமான விஷயங்களுக்காகப் போக வேண்டிய வர்கள் கோயிலுக்குள் சென்று தீர்த்தமும் பிரசாதமும் வாங்காமல் கோயில் முற்றத்தில் நின்று பிரார்த்தனை செய்து சென்றால் போதும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.
இதையும் மூட நம்பிக்கையாகக் கருதுவதே பொதுவான இயல்பு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கை அல்ல,
கோயில்களின் கட்டட நிர்மாண அமை ப்பின் விளைவாகவே நமக்கு நமக்கு இவ்வாறு வணங்கியும் பலன் கிடைக்கின்றது. வாஸ்து சாஸ்திரத்தின் தனித்தன்மையின் காரணமாக நாம் எந்த கோயிலில் சோதனை செய்தாலும் அங்கே நவீன விஞ்ஞானம் 'ஜியோ எனர்ஜி' என்றழைக்கும் பூசக்தி பரவிக் கொண்டிருப்பதை உணரலாம்.
பக்தருக்கு அனுகூலமான சக்தி அளிப்பதோடு
அவரில் நன்மையான மாற்றங்களையும் காணலாம். சாதாரண பூமியில் அசைவற்ற சக்தி 'ஸ்டாடிக் எனர்ஜியே' காணப்படும். ஆனால் கோயில் நிர்ம்மாணத்துக்கான வாஸ்துத் திட்டங்களின் விளைவாக அது சலன சக்தி டைனமிக் எனர்ஜியாக மாறுகின்றது. இந்த சக்தியே பக்தருக்குள் சென்று பரவுகின்றது. இது தினமும் பூஜைகள் நடத்தும் கோயில்களில் மட்டும் கிடைப்பதல்ல என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
பூஜைகள் முறையாகச் செய்யப்படாத ஒரு கோயில் வளாகத்தில் போய் வணங்கி வந்தாலும் இந்நன்மை கிடைக்கும் அதாவது சக்தியின் நிலை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. "கோயில்களின் சக்திச் செயல்பாடுகள்" என்ற தலைப்பில் டாக்டர் பிரபாத்குமார் போதார் சுக்ருதீன்திரா ஓரியன்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யுட் ஜர்னல் (அக்டோபர் 1999) இல் இது சம்மந்தமாக மிக விரிவாக எழுதியுள்ளர் வேப ச அதாவு
e சென்னைக்கு அரு சென்னைக்கு அருகாமையில் மாமல்ல - புரத்தில் பல வருடங்களுக்கு முன் அழிந்து போன ஓர் கோயிலில் இவர் செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையிலே இது எழப்பட்டது.
மேல் குறிப்பிட்டுள்ள கோயிலில் சிவலிங்கம் உடைந்து சிதறி, பூஜைகள் எதுவும் செய்யப்படாமல் நாசமடைந்திருந்தாலும் அங்கே செல்பவர் உடலில் சக்தி நிலை அதிகரித்ததாகக் கண்டார்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது கோயில் முற்றத்தில் சென்று சேருபவர்களுக்கும் சக்தியளிக்க கோயில் அமைப்புக்கு இயலும் என்பதே.