மணி ஓசையின் தனித்தன்மை என்ன?
பூஜை நேரங்களிலும், கோயில்களிலும் மட்டும் பயன்படுத்தியிருந்த மணி இப்போது வீடுகளில் அழைப்பு மணியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
பூஜைக்குப் பயன்படும் ஒரு பொருளாகவே மணியைப்பற்றி நாம் கருதி வந்தோம். ஆனால் மணி யோசையை யாரும் ஆராய்ந்தறிய முன்வருவதில்லை.
கிராமப்புறத்து செம்மண் சாலைகளில் ஊர்ந்து நகரும் மாட்டு வண்டிகளில் மாடுகளின் கழுத்திலிருந்து எழும்பும் மணியோசையைப் பற்றி நம் கவிஞர்கள் அழகாக வருணித்துள்ளனர்.
மணியோசை ஓர் ஓம்கார நாதம் என்பதே அதை ஆராய்ந்தவர் கண்டறிந்தது.அலை போல் உயர்ந்து படிப்படியாகத் தாழ்ந்து ஒரு குறிப்பிட்ட அளவில் உயரும் ஓம் என்ற பிரவண மந்திரத்துக்கு மனதை உணர்வூட்ட இயலும் என்று அவர்கள் கருத்து. பக்தர்களை பரவசத்திற்கு கொண்டு செல்லும் இயல்பு இவ்வோசைக்கு உண்டு என்பதைநாம் கண்டறிந்தோம்.