சங்கூதுவதில் என்ன மகத்துவம்?
கடலிலிருந்து கிடைக்கும் ஒரு செத்துப் போன பிராணியிலிருந்து எழும்பும் ஓசையே சங்கொலி என்றும் இது சுற்றுச் சூழ்நிலையை ஒலி மாசுபடிய வைக்கும் என்றும் இறுதித் தேர்வில் எழுதிய ஒரு மாணவனைக் குறித்து ஏதோ பத்திரிகையில் படித்தே ஞாபகம்.
அந்த மாணவன் மீது பெரும் தவறு எதுவும் இல்லை என்றே கூற முடியும். ஏனென்றால், அந்த மாணவன் படித்திருந்ததும் போதனையால் புரிந்து அவ்வளவே. ஆனால், பெரியவர்கள் கொண்டிருந்ததும்
சங்கொலியின் மகிமையைப் பற்றி சாஸ்திரமும் ஆசாரவிதிகளும் ஏராளம் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
பொதுவாக கோயிலிலே நாம் சங்கொலி உயருவதைக் கேட்கின்றோம். தீபாராதனை வேளையில் மந்திரம் ஜெபிக்கும் ஓசை, மணி ! மற்று சங்கின் ஓசை என்பவை காதுக்கு இன்பமூட்டும் போது, தேவ விக்கிரகங்களுக்கு முன் தீபச்சுடர்கள் உயருவதும் காணும் போது பக்தரில் பரவசம் நிறைவதும் மனதில் நிம்மதி பிறப்பதும் நாம் கண்டறிந்திருக்கின்றோம்.
இறைவனைச் சார்ந்த "ஓம்" எனும் மங்கள ஓசையே சங்கிலிருந்து எழும்புவது.
விளம்பர ஒலியாகவும் சங்கொலிளைக் காண்பதில் தவறில்லை. குருக்ஷேத்திர யுத்தத்தின் ஆரம்பத்தில் போர்க்களத்தில் எழுப்பக்கேட்ட சங்கொலி அறிந்தவர் மனதிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை.
சங்கை உரைத்து சில நோய்களுக்கான மருந்துக்கலவையில் சேர்ப்பதுண்டல்லவா! இதிலிருந்து சங்கில் ஓர் தனிப்பட்ட மருத்துவ குணம் இருப்பதை அறியலாம்.
சங்கிலிருந்து உயரும் ஒலி அலைகளைப் பெற்றுக் கொள்ளும் நபரின் மூளையில் பயன் தரும் அதிர்வுகள் உண்டாகும் என்று நவீன சாஸ்திரம் கண்டறிந்துள்ளது.