கோயிலில் ஏன் காணிக்கை செலுத்த வேண்டும்?
அருகாமையிலுள்ள கோயிலில் ஒரு காணிக்கை செலுத்த வேண்டும் என்று பாட்டி சொல்லும் போது இறைவனிடமிருந்து ஏதோ பெறுவதற்க்காக பாட்டி செய்யும் தந்திரம் என்று குழந்தைகள் கேலிசெய்வது வழக்கம்.
ஆனால் இது கேலி செய்யத்தக்க வெறும் ஒரு தந்திரம் அல்ல. நம் முன்னோர்கள் இதையும் ஓர் ஆராதனையாகக் கருதியிருந்தனர். பொதுவாக ஒரு பால்பாயசம்,விளக்கு, பூ அல்லது விளக்கிற்கான எண்ணை, முதலியவை காணிக்கையாக படைப்பது வழக்கம். ஒரு பொருத்தனை நேர்ந்து நிரந்தரம் பிரார்த்தனை செய்து இறைவனில் மையப்படுத்துவதன் விளைவாக பக்தனின் உள்ளத்தில் குடி கொள்ளும் ஜீவசக்தி உணர்வடைந்து நினைத்த வழிபாடை இறைவன் ஆசியால் நடத்த வல்லவனா-குகின்றான் என்று நம் முன்னோர்கள் பண்டைகாலத்திலே புரிந்து கொண்டிருந்தனர்.
பூஜைக்குத் தேவையான பொருள்கள் தேவனுக்கு காணிக்கையாகப் படைப்பதனால் படைப்பவர் தானும் பூதை மாறுகின்றார். வச மின
இந்த விஷயத்து மேல் நாட்டினர்களின் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நிரந்தரமான திட நம்பிக்கையால் எதையும் சாதிக்க முடியும், அதற்கான சக்தி மனிதனில் உண்டு என்ற உண்மை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. வழிபாடுகள் வாயிலாக பக்தர்களுக்கு கிடைக்கப் பெறுவதும் இதுவே. நேர்ச்சைகள் நடத்தாதவர்களும் கோயிலில் பக்தியுடன் காணிக்கைகள் படைப்பதைக் காணலாம். இறைவன், அரசன்,குரு, குடும்பத் தலைவன் என்பவர்களைக் காண செல்லும் போது வெறும்கையுடன் செல்லாகாது என்ற பாரத நம்பிக்கை இன்றும் உறுதியாகச் செயல்படுகின்றது.