Type Here to Get Search Results !

Translate

வான வேடிக்கை என்கிற வெடி வழிபாடு எதற்காக?

வான வேடிக்கை என்கிற வெடி வழிபாடு எதற்காக?

 வெடி வழிபாடு எதற்காக?


சமாதானத்துடன் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யலாம் என்ற எண்ணத்துடன் கோயிலுக்குச் சென்றால் அங்கு காதை அடைக்கும் வெடி ஓசை கேட்கின்றது என்று சில இறை நம்பிக்கையா ளர்களே சலித்துக் கொள்வதைக் கேட்கலாம். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அவர்கள் சலித்துக் கொள்வது நியாயம் என்று தோன்றும் அனேகமாக கோயில்களில் காதடைக்கும் ஓசையுடனே வெடி வழிபாடு நடக்கின்றது. ஆனால் இந்த வெடியை நம் முன்னோர்கள் பக்தியுடன் கொண்டிருந்தனர்.

'கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து வெடி வைத்து காதை அடைக்கச் செய்வதிலா பக்தி' என்று கேள்வி கேட்போரும் உண்டு.

துயிலும் இறைவனை நாம் வந்திருப்பதை அறிவித்து விழிக்க வைப்பதற்காகச் செய்யும் ஆராதனையே வெடி வழிபாடு என்று பழைய மக்கள் கருதிவந்தனர்.

நம்நாட்டில் பல கோயில்களிலும் வெடி வழிபாடு ஓர் முக்கிய ஆராதனை. அதை நடத் துவதற்காக சில்லறை நாணயங்களை சேகரித்து வைத்து சேர்த்து வழங்கும் பக்தர்களும் உண்டு. ஆனால் கோயில்களில் வெடி வழிபாடு நடத்துவதின் பின்னால் ஒரு பெரிய தத்துவம் மறைந்துள்ளது. பிரபஞ்சம் உருவானதில் "பிக்-பாங்தியரி" என்ற சித்தாந்தம். பிரபஞ்சத்தில் பல கோடி வருடங்க ளுக்கு முன் ஒரு மாகா வெடித்தால் நிகழ்ந்த தென்றும் அதில் சிதறி உருவானதே விண்வெளி கோளங்கள், கிரகங்கள் முதலியவை என்று ஓர் சித்தாந்தம். இதை அடையாளமாக்கி வெடி வழிபாடு நடத்துகின் றனர் என்பதே. வெடி ஓசை உயரும் போது சுற்றுச் சூழலிலுள்ள விஷ அணுக்களும், தீயசக்திகளும் அகன்று போகும் என்பதும் ஓர் உண்மை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad