பெண்கள் தேவிக்கு பொங்கல் படைக்க வேண்டுமா?
நம் கோயில்களில் வருடம் தோறும் கொண்டாட்டத்துடன் நடத்தும் ஓர் சடங்கு பொங்கல். கோயிலில் மட்டுமல்ல விசேஷ நாட்களில் வீட்டு முற்றத்திலும் பொங்கல் படைக்கின்றனர். கான்கிரீட் வீடுகளும் வளர்ந்து நாடு "சைபாசிடி"யாக மாறிவரும் காலத்தில் இது குறைந்து வருகின்றது.
பக்தி வெளிப்படுதலால் தேவீ நாமங்கள் சொல்லிக்கொண்டே பக்தர்கள் தேவதைகளுக்கு பொங்கல் படைக்கின்றனர். ஜகத் மாதாவான பராசக்தியை பூஜிக்கும் போது மாதாவுக்கு முன் அந்த சத்சொரூபத்தை இதன் வாயிலாக சமர்ப்பிக்கின்றனர். இருளை அகற்றி ஒளிக்காக வேண்டுவதே இச்சடங்கின் முக்கிய விசுவாசம். மேலும் தங்கள் வெற்றி தோல்விகளையும், ஆசைகளையும், விவரித்து ஆறுதலடைவது இதனால் பெறும் பயன்.
திராவிட மக்களில், பய பக்தியுடன் விசுவாசத்துடனும் பெண்கள் பொங்கல் படைக்கும் போது, பானைகளில் கொதித்துப் பொங்கிமறிவது அகம் என்றே நம்பிக்கை. அகம் அழிந்து கடைசியில் அது நிவேத்யமாக மாறுகின்றது.
கடும் வெப்பம், மூச்சுத்திணற வைக்கும் புகை, ஓசை நிறைந்த சூழ்நிலை முதலியவை பெண்களில் அன்றாட வாழ்க்கையின் சோதனை களையும் இக்கட்டான நிலைகளையும் சமாளிக்கும் திறனை அளிக்கின்றன.
மண்பானையில் பொங்கலிடுவதன் நன்மை சிறப்பானது. மண்பானையில் சமைக்கும் உணவிலுள்ள அசுத்தங்களை மண்பானை உறிஞ்சி எடுக்கும் என்பது அறிவியல் சுட்டிக் காட்டியுள்ளது.