சங்கினுள் கடல் இரைகின்றதா?
சை அதை சங்குகளுக்குள் கடலிரையும் கேட்கும் என்று ஓர் நம்பிக்கை உண்டு. சங்கு வாங்கும் கடையில் அதை வாங்கும் போது தை வாங்கும் போது அதைத் தட்டி சப்தம் கேட்பதும் காதுக்கருகில் வைத்து கடலிரைச்சல் பரிசோதிப்பதும் வழக்கமானது.
ஒலியின் முக்கிய தன்மையான எதிரொ லியின் அடிப்படையில் இந்த இரைச்சல் கேட்கின்றது என்பது உண்மை. வாயுவில் எப்போதும் இது போன எப்போதும் இது போன்ற எதிரொலிகள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. அவை நாம் கேட்குமளவுக்கு உரக்க எழும்புவதில்லை என்பதால் நம் காதுகளுக்கு எட்டவில்லை. சங்கை காதில் வைத்துப் பார்க்கும் போது வாயுவில்லுள்ள சில அதிர்வு எண்ணிலுள்ள ஓசை அலைகளே எதிரொலிக்கின்றன.
எந்த அதிர்வு எண் பிரதிபலிக்கப்படுகின்றது என்பது அதனுள்ளிலுள்ள வாயுவின் கன அளவைப் பொறுத்திருக்கும். இவ்வாறு பிரதிபலிக்கும் ஓசையும் அதே அதிர்வு எண்ணிலுள்ள ஓசையும் சேரும் போது அனுநாதம் உண்டாகின்றது. மேலும் ஓசையின் தீவிரம் பல மடங்காக அதிகரிக்கின்ற போது நம் காதுகளால் கேட்க இயலுகின்றது. இந்த ஓசை கடலிரைச்சல் போல் தோன்றுகின்றது என்பதே உண்மை.