Type Here to Get Search Results !

Translate

வணக்கம்'கூறுவது எதற்காக ?

வணக்கம்'கூறுவது எதற்காக ?

 வணக்கம்'கூறுவது எதற்காக ?

பாரதப் பரம்பரையின் மூலைக் கல்லாக விளங்குவது மரியாதை. முதியோரிடமும், மதிப்புக்குரிய பெரியோர்களிடமும் வணக்கம் கூறுவதும் நமது பரம்பரைச் சொத்து.

ஒரு நபரை ஒரு நாளில் முதலாவதாகச் சந்திக்கும் போதும், பலநாட்களுக்குப்பின் காணும் போதும் வணக்கம் கூறி து வழக்கம். மேலும் விருந்தினர் வரும் போது நம் இருக்கையிலிருந்து எழுந்து வணங்கி வரவேற்று விருந்தினரை அமரச் செய்த பின்னரே நாம் அமருவது வழக்கம். விருந்தினர் விடைபெறும் போதும் வாசல் வரைச் சென்று வழியனுப்பி விடை கொடுப்பதிலும் நாம் தவறுவதில்லை. ஆனால் இப்போது காலம் மாறிவருகின்றது. இன்றைய தலைமுறை இவ்வழக்கங்களை உதறிவிடவும் ஏளனம் செய்யவும் தயங்குவதில்லை.

இரண்டு கைகளும் சேர்த்து தலைகுனிந்து வணங்கி 'நமஸ்தே' என்று சொல்லும் போது நாம் பொருளாக்குவது என்னவென்றால் 'ந' என்பது இல்லை என்றும் 'ம' என்பது என்னுடையது என்றும் 'தே' என்பது உங்களுடையது என்றும் ஆகும். என்னுடையதாகக் காணும் இவ்வுடல் என் சுய லாபத்துக்கானதல்ல என்றும் உங்கள் சேவைக்கானது என்றும் பொருள்படக்கூறுகின்றோம். தன்னை விட தம் முன்நிற்கும் நபருக்கே உயர்வளிக்கும் பண்பு இதில் நமக்குக் காண இயலும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad