குவளை ஜன்ம பாவங்களை அழிக்கும் என்பது ஏன்?
புனிதமும் முக்கியத்துவம் சிவன் கோயில்களில் குவளை மரத்துக்கு நிறைந்ததுமான இடம் இடம் அளித்துள்ளனர்.
சிவ-பார்வதிக்கு மிகவும் விருப்பமான மரத்தின் முட்கள் சக்தி சொரூபமும் கிளைகள் வேதமும் வேர்கள் ருத்திரரூபமுமாகும் என்று கருதப்படுகின்றது.
பிரிந்திருப்பதைக் குவளையில் ஒவ்வொரு இதழும் மூன்றாகப் பிரிந்திருப்பதைக் காணலாம். இதில் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு நன்மை அளிக்கும் இயல்புண்டு. இம்மூன்று பாகங்களையும் பரம சிவனின் மூன்று திருக் கண்களாக பக்தர்கள் போற்றுகின்றனர்.
ஜன்ம பாவங்களை அகற்றும் திவ்ய தாவரமாக குவளையை பக்தர்கள் நம்பி வருகின்றனண். இதில் பார்வைக்கு எட்டாத தெய்வீக அரவணைப்பு எப்போதும் இருப்பதாகவும் பக்தர் கருதுகின்றனர். அமவாசி பௌர்ணமி நாட்களில் குவளையின் இலையைப் பறிக்கலாகாது என்பது நம்பிக்கை.
அனேக மருத்துவகுணங்கள் உடைய ஓர் உத்தம ஆயுர்வேத மூலிகையாக குவளையை மேல்நாட்டு பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சி செய்து வருவதாக 'சய்ன்ஸ்டுடெய்' பத்திரி கையில் குறிப்பிட்டுள்ளது.
வாதம், கபம், வாந்தி, காசநோய், வயிற்றுக் கோளாறு என்ற நோய்களிலிருந்து நிவாரணமளிக்கவல்லது குவளை, சிறுநீரகத்தின் நோய்க ளுக்கும் இது சிறந்த மருந்தாகப் பயன்படும். இத்தாவரத்தின் இலையின் சாறுபிழிந்து காய்ச்சின எண்ணை,காதுவலி, காதில்பழுப்பு முதலிய பிரச்சினைகளிலிருந்து விடுதலையளிக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளது.
அமாவாசி பௌர்ணமி நாட்களில் இயற்கையில் உண்டாகும் மாறுதல்கள் இத் தாவரத்தை பாதிக்கும் என்பதாலே இந்நாட்களில் இதன் இலைகளைப் பறிக்கலாகாது என்று விதித்துள்ளனர். -