Type Here to Get Search Results !

Translate

யஜ்ஞாயஜ்ரீய தியானம் - (உடம்பைத் தியானித்தல்)

 யஜ்ஞாயஜ்ரீய தியானம் - (உடம்பைத் தியானித்தல்)

‘உடம்பை ஒரு தடையாக நினைத்திருந்தேன். உடம்பில் ஒ இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்பதைக் கண்ட பிறகு அதனை ஒரு கோயிலாக எண்ணிப் பாதுகாக்கிறேன்" என்கிறார் திருமூலர். உடம்பை ஒருபோதும் வெறுக்கவோ,

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்;
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.

-- திருமந்திரம், 725.


ஒரு தடையாகக் கருதவோ கூடாது. ஆன்மாவை உணர்வதற் காக, தம்மை அடைவதற்காக இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கருவியே உடம்பு என்ற எண்ணம் வேண்டும்.

இந்த உடம்பு பதினொரு வாசல்களை உடைய ஒரு நகரம் (புரம்) என்று கட உபநிஷதம் (2:2.1) கூறுகிறது. உடம்பை ஒரு நகரமாகக் கூறுவது எண்ணிப் பார்க்கத் தக்கது. ஒரு நகரத்தில் நடைபெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் உடம்பில் நிகழ்வதை இன்றைய உடலியலின் துணையால் நாம் நன்றாக அறிய முடியும். சமுதாய வாழ்க்கை, கல்வி, கோயில், போக்கு வரத்து, நதிகள், உணவு உற்பத்தி, சுத்திகரிப்பு, கழிவை வெளியேற்றுதல், காவல் என்று ஒன்றுவிடாமல் எல்லா துறைகளும் உடம்பினுள் உள்ளன. நமது முனிவர்கள் விஞ்ஞானத்தின் துணையின்றி அன்றே இதனை உணர்ந்து கூறியிருப்பது வியக்கத் தக்கது. சாந்தோக்ய உபநிஷதம் உடம்பை வெறும் நகரம் என்று கூறாமல், 'தெய்வநகரம்' (ப்ரஹ்மபுரம்;) என்று கூறுகிறது.

உடம்பைத் துன்புறுத்தும்போது ஒருவன் உடம்பில் வாழும் இறைவனையும் துன்புறுத்துவதாக பகவத்கீதை (17:6) கூறுகிறது.

எனவே உடம்பையே தியானிக்குமாறு, அதாவது, உடம்பின் பல்வேறு அங்கங்களைத் தியானிக்குமாறு இந்தப் பகுதி கூறுகிறது

ஐந்து பக்திகளைக் கீழ்க்காணுமாறு உடம்பின் ஐந்து அங்கங் களாகத் தியானிக்க வேண்டும்:

ஹிங்காரம் - முடி
பிரஸ்தாவம் - தோல்
உத்கீதம் - சதை
பிரதிஹாரம் - எலும்பு
நிதனம் - மஜ்ஜை

இது யஜ்ஞாயஜ்ஜீய தியானம்; உடம்புடன் தொடர்புடையது.

பலனும் நிபந்தனையும்

உடம்பின் தொடர்புடைய இந்த யஜ்ஞாயஜ்ஜீய தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் தேக ஆரோக்கியத்துடன் திகழ்கிறான்; அவனது அங்கங்கள் பழுதாவ தில்லை. அவன் முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடைச்செல்வத்துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாக வும் புகழுடனும் திகழ்கிறான்.

இந்தத் தியானம் செய்பவன் ஓராண்டு அசைவ உணவு உண்ணக் கூடாது அல்லது ஒருபோதும் உண்ணக் கூடாது. இது நிபந்தனை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad