ரேவதீ தியானம் - (மிருகங்களைத் தியானித்தல்)
மிருகங்களாகவும் ஐந்து பக்திகளைக் கீழ்க்காணுமாறு மனிதனாகவும் தியானிக்க வேண்டும்:
ஹிங்காரம் - ஆடுகள்
பிரஸ்தாவம் - செம்மறியாடுகள்
உத்கீதம் - பசுக்கள்
பிரதிஹாரம் - குதிரைகள்
நிதனம் - மனிதன்
இது ரேவதீ தியானம்; மிருகங்களுடன் தொடர்புடையது.
பலனும் நிபந்தனையும்;
மிருகங்களுடன் தொடர்புடைய இந்த ரேவதீ தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் கால்நடைச் செல்வம் படைத்தவனாக ஆகிறான்; முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடைச் செல்வத்துடனும் வாழ்கிறான். பெருமை மிக்கவனாகவும் புகழுடனும் திகழ்கிறான்.
இந்தத் தியானம் செய்பவன் மிருகங்களைத் துன்புறுத்தக் கூடாது. இது நிபந்தனை.