சக்வரீ தியானம் - (பிரபஞ்சத்தைத் தியானித்தல்)
பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களைத் தியானித்த பிறகு, பிரபஞ்சம் முழுமையையும் தியானிக்குமாறு கூறப்படுகிறது.
ஐந்து பக்திகளைத் கீழ்க்காணுமாறு பிரபஞ்சத்தின் ஐந்து முக்கிய அம்சங்களாகத் தியானிக்க வேண்டும்:
ஹிங்காரம் - பூமி
பிரஸ்தாவம் - வானம்
உத்கீதம் - சொர்க்கம்
பிரதிஹாரம் - திசைகள்
நிதனம் - கடல்
இது சக்வரீ தியானம்; பிரபஞ்சத்துடன் தொடர்புடையது.
பலனும் நிபந்தனையும்
பிரபஞ்சத்தின் தொடர்புடைய இந்த சக்வரீ தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் பிரபஞ்சத்தின் நன்மைகளைப் பெறுகிறான். அவன் முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான். பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடை செல்வத்துடனும் வாழ்கிறான். பெருமை மிக்கவனாகவும் புகழுடனும் திகழ்கிறான்.
இந்தத் தியானம் செய்பவன் இயற்கையின் அம்சங்களை நிந்திக்கக் கூடாது. இது நிபந்தனை.