வைரூப்ய தியானம் - (மழையைத் தியானித்தல்)
ஐந்து பக்திகளைக் கீழ்க்காணுமாறு மழையின் ஐந்து நிலை களாகத் தியானிக்க வேண்டும்:
ஹிங்காரம் - திரள்கின்ற மேகங்கள்
பிரஸ்தாவம் -மழை மேகம்
உத்கீதம் - மழை பொழிவது
பிரதிஹாரம் - மின்னலும் இடியும்
நிதனம் - மழை நின்றுபோவது
இது வைரூபத் தியானம்; மழையுடன் தொடர்புடையது.
பலனும் நிபந்தனையும்
மழையுடன் தொடர்புடைய இந்த வைரூபத் தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் அழகிய பல்வேறு மிருகங்களை உடையவனாக விளங்குகிறான்; முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடைச் செல்வத்துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாகவும் புகழுடனும் திகழ்கிறான். இந்தத் தியானம் செய்பவன் மழையை நிந்திக்கக் கூடாது. இது நிபந்தனை.
_இராமகிருஷ்ண மிஷின்
மேலும் தகவலுக்கு - ஸிவ ஸ்ரீ நக்கீரன் - +917904599321