ப்ருஹத் ஆதித்ய தியானம் (சூரியனைத் தியானித்தல்)
பிருஹத் சாம மந்திரத்தை சூரியனாகத் தியானிக்குமாறு கூறுகிறது இந்தப் பகுதி.
ஐந்து பக்திகளில் பிருஹத் சாம மந்திரத்தை நிலைநிறுத்தி, கீழ்க் காணுமாறு சூரியனின் பல்வேறு நிலைகளாகத் தியானிக்க வேண்டும்:
ஹிங்காரம் -உதிக்கின்ற சூரியன்
பிரஸ்தாவம் - உதித்த சூரியன்
உத்கீதம் - மதிய சூரியன்
பிரதிஹாரம் - பிற்பகல் சூரியன்
நிதனம் - மறைகின்ற சூரியன்
இது பிருஹத் ஆதித்ய தியானம்; சாம மந்திரத்துடனும் சூரியனுடனும் தொடர்புடையது.
பலனும் நிபந்தனையும்
பிருஹத் சாம மந்திரத்துடனும் சூரியனுடனும் தொடர்புடைய இந்த பிருஹதாதித்ய தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் புகழுடன் விளங்குகிறான்; முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடைச் செல்வத்துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாகவும் புகழுடனும் திகழ்கிறான்.
இந்தத் தியானம் செய்பவன், சூரியன் தகிக்கிறார் என்பதற் காக அவரை நிந்திக்கக் கூடாது. இது நிபந்தனை.
மேலும் தொடபுக்கு - ஸிவ ஸ்ரீ நக்கீரன் - +917904599321