கோயிலுக்குள்ளே ஸ்ரீ பார்த்து வணங்க வேண்டுமென்பது ஏன்?
ஸ்ரீ கோவிலுக்குள்ளிருக்கும் தேவ விக்கிரகத்தை பார்த்து நின்று ஜெபம் செய்தால் மனதில் பாரங்கள் இறக்கிவைத்த அனுபவம் பக்தருக்குண்டாகும்.
நவீனம்பலகோயில்களில் வந்து சேர்ந் தாலும் நம் கோயில்களில் பொதுவாக மின் விளக்குகள் ஸ்ரீ கோயிலுக்குள் பயன்படுத்துவதில்லை. எங்காவது அவ்வாறு செய்திருந்தால் யுக்தியையும் சாஸ்திரத்தையும் மீறி செய்திருக்கின்றனர் எனக் கூறலாம்.
ஸ்ரீ கோயிலுக்குள் நல்ல பிரகாசமான விளக்குகள் வைப்பதில் எந்த யுக்தியும் சாஸ்திர மும் மீறப்பட்டிருக்கின்றன என வினவலாம். மெய்ஞானமாகும் பிரம்ம போதத்தை மனிதன் தன் காம வாசனைகளின் சூழலில் மறந்து விடுகின்றான். கோயிலை நம் உடலாக மதிப்ப-தனால் அங்குள்ள தேவன் இருளால் சூழப்பட்டிருபதை உணர வேண்டும். ஸ்ரீ கோயிலுள்ளிருக்கும் தேவ விக்கிரகத்தை எண்ணையிட்டு விளக்கேற்றி ஒளிபெறச் செய்ய வேண்டும். அது போல் மனிதனும் தன்னுள் நிலை கொள்ளும் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஆத்துமாவை ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதே தீபம் ஏற்றுவதின் அர்த்தம்.
மிதமிஞ்சிய ஒளி நம் கண்களின் ரெடினாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மிதமான சாந்தமான எண்ணை விளக்கின் ஒளிக் கதிர்கள் கண்களுக்கு நன்மையளிக்கும் என்பது அறிவியல் ஒப்புக் கொள்கின்றது. இதிலிருந்து, ஸ்ரீ கோயிலினுள்ளிலுள்ள விளக்குகளிலிருந்து பிரதியலிக்கும் சாந்தம் மனதுக்கும் உடலுக்கும் நன்மை தரும் என்பதை அறிவோம்.