சிவன் கோயிலில் ஏன் முழுதும் சுற்றி வலம் வருவது தடை
செய்யப்பட்டிருகின்றது.
எல்லாக் கோயில்களிலும் சுற்றம்பலத்தைச் சுற்றி வலம் வர வேண்டும் என்று ஆசாரியர்கள் விதித்துள்ளனர். ஆனால் சிவன் கோயிலில் ஸ்ரீ கோயிலையோ சுற்றம்பலத்தையோ முழுதும்சுற்றி வருவது அனுமதிக்கப்படவில்லை. தெரியாமல் யாராவது சுற்ற வருவதைத் தடுக்க சில கோயில்களில் கயிறால் கட்டி வைத்திருப்பதைக் காணலாம்.
முழுமையுள்ள தேவனாகவே பரமசிவனை பக்தர்கள் காண்பது அப்படி முழுமையின் கருத்தில் விளங்கும் பரமசிவனை முழுதும் வலம் வைத்தால் பரிமிதம் என்ற பொருள் கொள்ளலாமே! அதனால் சிவனின் முழுமை - அபரிமிதம் விளங்க வைக்கும் ஆசாரமே பாகமாக சிவன் கோயிலை வலம் வருவது.
சிவ பெருமானின் தலையிலிருந்து கங்கா மாதா ஒழுகிக் கொண்டிருபதாக நம்புகின்றோம். அந்த தாராஜலம் ஒழுகும் நீர்க்காலை முறித்து வலம் வருதல் ஆகாது என்ற விசுவாசமும் சிவன் கோயிலை முழுதும் சுற்றி வருவதில் தடை விதித்திருக்கின்றது.