பிள்ளைகளால் செல்வம், செல்வாக்கு யோகம் யாருக்கு?
இந்த உலகில் மனிதனாக பிறந்த யாராக இருந்தாலும் திருமணம் என்ற ஒரு நிலைக்கு வந்துதான் ஆக வேண்டும். அவ்வாறு திருமணம் முடிந்து இல்லறம் குழந்தைபேறு என்று பல நிலைகளை கடந்து செல்வது தான் மனித வாழ்க்கை ஆகும்.
இந்த மனிதனின் வாழ்க்கையில் பிள்ளைகளால் செல்வம் மற்றும் செல்வாக்கு பெறும் பெற்றோர்கள் யார் என்றும் அது போன்ற யோகம் யாருக்கு என்றும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தந்தையின் இலக்கனமே புத்திரரின் இலக்கனமாகப் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.
தந்தையின் இலக்கனத்திற்கு 5,7,9,10 போன்ற வீடுகளில் இலக்கனமாக அமைய பிறந்த பிள்ளைகள்.
சூரியன் 6,8,9,12 போன்ற இடங்களில் பலப்படாமல் உதித்த புத்திரர்கள்.
சிம்ம வீட்டில் இராகு, செவ்வாய், கேது, சனி போன்ற தீய கிரகம் சஞ்சரிக்காத நிலையில் உள்ள புத்திரர்கள்.
சூரியன், ராகு இணைந்து சஞ்சரிக்காத நிலையிலும் பெற்றோர்களுக்கு பேரும் புகழும் கிட்டும்.
மேலும் செல்வாக்கும் மிகுந்து சமூகத்தில் மிகச்சிறந்த ஆளாக விளங்கி எல்லாவிதமான சுகங்களையும் பெற்று வாழ்வர்.
இது போன்ற நிலைகளில் பிறக்கும் குழந்தைகளினால் பெற்றோர்கள் அனைத்துவிதமான செல்வம், செல்வாக்கு யோகம் பெறும் வாய்ப்புகள் உள்ளது என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.