Type Here to Get Search Results !

Translate

உங்களில் யாருக்கு கோடீஸ்வரர் யோகம் இருக்கும்

கோடீஸ்வரர் யோகம் யாருக்கு!

கோடீஸ்வரர் யோகம் யாருக்கு!

உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். உண்மையில், அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு கோடீஸ்வரர் யோகம் இருக்கிறது. எப்போது என்பதைத் தெரிந்துக்கொண்டு செயல்பட்டால், நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்....!

கோடீஸ்வரர் யோகம் யாருக்கு?

சராசரி வாழ்க்கைக்கே போராடும் இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர்.

உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது.

வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ;டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ரூடவ்டுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.

குரு வருடந்தோறும் மாறுவதால், பொதுவாக குருபலம் இருக்கிறது என்று புதிய தொழில் தொடங்கிவிடக்கூடாது. ஏனென்றால், கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ;டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்சனையால் தொழில் நஷ;டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அத்தகைய காலங்களில் புதிய தொழில் தொடங்குவதை தவிர்த்தல் நலம்.

கோசார பலனை மட்டும் பார்க்காமல் 3,6,8,12ம் அதிபதி திசை, பாதகாதிபதி திசை, மாரகாதிபதி திசைகளைத் தவிர்த்தும், நடக்கும் திசையின் நிலையை ஜாதகத்தில் முறையாகத் தெரிந்துகொண்டும் புதிய முடிவுகளை எடுத்தால், தோல்விகளைத் தவிர்க்கலாம்.

கோடீஸ்வரர் யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், புதாதித்ய யோகம் போன்ற ராஜயோக பலன்கள் இருந்தும் அதற்குரிய திசை, பலம் இவற்றை அறிந்து சுப பலன்களை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைப் பலர் அமைத்துக் கொள்ளாமல் விடுவதால், யோகங்களின் பலன்கள் முழுதாகக் கிடைப்பதில்லை.

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்து கொள்ளலாம். ராசி அதிபதிகளின் திசை நடக்கும்போது எப்படிப்பட்ட ஜாதகர் வாழ்க்கையிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.

மேஷம், விருச்சிகத்துக்கு செவ்வாய் திசை.

ரிஷபம், துலாமுக்கு சுக்கிர திசை.

மிதுனம், கன்னிக்கு புதன் திசை.

மீனம், தனுசுக்கு குரு திசை.

மகரம், கும்பத்துக்கு சனி திசை.

சிம்மத்துக்கு சூரிய திசை.

கடகத்துக்கு சந்திர திசை.

என்ற லக்னாதிபதிகள், ராசி அதிபதிகளின் திசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். அதேபோல், 2,10,11ம் அதிபதிகளின் திசை சுப பலம் பெற்று நடைப்பெற்றால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.

11,9ம் இடங்களில் யாரால் யோகம்?

சூரியன் பலம் பெற்றால் தந்தையால் யோகம்.

சந்திரன் பலம் பெற்றால் தாயால் யோகம்.

செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப்புகளால் யோகம்.

புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும் யோகம்.

குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களால் யோகம்.

சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியால் யோகம்.

சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள் மூலம் யோகம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad