திருமணத்திற்கு பிறகு யோகம் யாருக்கு?
திருமணம் ஒருவருடைய வாழ்வில் மிகபெரும் திருப்புமுனையாகும், திருமணம் அமைந்த பின்பு சிலர் பெரும் செல்வந்தர்களாக உயருகிறார்கள். இன்னொருபுறம் பெரிய பணக்காரர்களாக இருப்பவர்கள் வீட்டில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்விலே மாபெரும் சரிவு உண்டாகி சாதாரண ஏழை என்ற அவல நிலைக்கு சென்று விடுவார்கள். இந்த இரண்டு நிலையையும் நாம் கண்கூடாக காண்கிறோம்.
சுருங்க சொன்னால் ஒரு ஆண்மகனுக்கு அமையும் மனைவியால் யோகம் கூடுவதையும், ஒரு பெண் வரும் அமைப்பால் அதிர்ஷ;டம் குறையும் நிலை உண்டாவதையும் காண்கிறோம்.
ஒரு ஆண்மகன் ஜாதகத்தில் ஏழாம் வீட்டைதான் களத்திர ஸ்தானம் என்கிறோம்.
இந்த ஏழாம் வீட்டிற்கு அதிபதி லாபஸ்தானத்தில் அமையப் பெற்றால் மனைவியால் யோகமும் மனைவி வந்த பிறகு அதிர்ஷ;டமும் ஏற்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் குருவோ அல்லது சுக்கிரபகவானோ ஜென்ம லக்னத்தில் அமைய பெற்று ஏழாம் வீட்டிற்கு அதிபதி 11-ல் அமைய பெற்றால், மனைவி வந்த பிறகு பெரும் அளவில் செல்வம் ஏற்படுகிறது.
ஏழாம் வீட்டிற்கு அதிபதி நான்கில் அமைய பெற்று ஏழாம் வீட்டில் குரு பார்வை உண்டானால் திருமணத்திற்கு பிறகு பூமி, வீடு, வாகனம், போன்ற யோகங்கள் ஏற்படுகிறது.
ஏழாம் வீட்டிற்கு அதிபதி பத்தில் அமைய பெற்று சுப பார்வை ஏழாம் வீட்டிற்கோ அல்லது ஏழாம் வீட்டு அதிபதிக்கோ கிடைக்க பெற்றால், திருமணத்திற்கு பிறகு நல்ல தொழில் யோகம் அமைவதுடன் தொழில் மேலும் மேலும் உயர்வு பெற்று பல லட்சங்கள் சேருகின்ற யோகமும் உண்டாகிறது.
ஏழாம் வீட்டிற்கு அதிபதி உச்சம் பெற்று ஒன்பதில் வீற்றிருந்தாலும் சுப பார்வை ஒன்பதாம் வீட்டிற்கு ஏற்பட்டால் திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகமும், அபரிதமாக பொருள் சேர்க்கும் அமைப்பும் உண்டாகிறது.
ஏழாம் வீட்டில் சுபகிரகம் அமைய பெற்று ஏழாம் வீட்டிற்கு அதிபதி கேந்திரம், திரிகோணம் போன்ற இடங்களில் அமைய பெற்றால் இளமையில் திருமணம் ஏற்படும் அமைப்புகளும், திருமணத்திற்கு பிறகு செல்வம், வாக்கு, புகழ், பெருமை யாவும் உண்டாகிறது.
களத்திரகாரகன் என்று சொல்லப்படும் சுக்கிரன் எந்த ராசியில் வீற்றிரிக்கிராறோ அந்த வீட்டிற்கு அதிபதி உச்சம் பெற்று காணப்பட்டால் மனைவி வந்த பிறகு செல்வம் சேரும். மகிழ்ச்சியான வாழ்வும் ஏற்படுகிறது.
உங்கள் ஜாதகங்களை வைத்து உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறதா என்று கண்டுபிடியுங்கள்.
வளமான வாழ்க்கை அமைய எங்களின் வாழ்த்துக்கள்!...