Type Here to Get Search Results !

Translate

லட்சுமி குபேர யோகம் உண்டாக பரிகாரங்கள்

லட்சுமி குபேர யோகம் உண்டாக பரிகாரங்கள்

லட்சுமி குபேர யோகம் உண்டாக பரிகாரங்கள்

வியாழக்கிழமையில் இந்த இலையால் தீபமேற்றினால் லட்சுமி குபேர யோகம் உண்டாகும்!

வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்கு உகந்த கிழமையாக இருக்கின்றது. வெள்ளிக்கிழமையில் எப்படி மகாலட்சுமியை வேண்டி வழிபடுகிறமோ அதேபோல வியாழக்கிழமையில் குபேர வழிபாடு செய்வது சிறப்பு.

அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெருக செய்யக்கூடிய இந்த ஒரு இலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இலை வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் வீட்டிற்குள் வருவார்கள் என்பது ஐதீகம். அது எந்த இலை? குபேர பகவான் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்..!!

இந்த இலை வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் உடைய ஆதிக்கம் அதிகரித்து காணப்படும். அந்தச் செடியை சுற்றிலும் ஒருவிதமான ரூடவ்ர்ப்பு இருக்கும். அந்த ரூடவ்ர்ப்பு நல்ல விஷயங்களை கிரகித்து நமக்கு கொடுக்கும். கெட்ட விஷயங்களை அகற்றிவிடும் அற்புத ஆற்றல் படைத்தது அந்த செடி. அது வேறு எந்த செடியும் இல்லை! மருதாணி செடி தான்.

மருதாணி செடிக்கு நல்ல சக்திகளை வெளியிடக்கூடிய ஆற்றல் உண்டு. அதன் இலைகளைக் கொண்டு தீபம் ஏற்றும் பொழுது லட்சுமி குபேரருடைய அருளைப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் தேடிக் கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம்.

வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் லட்சுமி குபேரர் படத்திற்கு முன்பு ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளி, தங்கம், பித்தளை, செம்பு என்று எந்த உலோகத்திலும் தாம்பூலத் தட்டு இருக்கலாம். ஆனால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள்.

பின்னர் அதன் மேல் மருதாணி இலைகளை பரப்பி அதன் மீது சில நாணயங்களை வையுங்கள். நாணயங்களில் மகாலட்சுமி வாசம் புரிகிறாள்.

மகாலட்சுமிக்கு உகந்த ஏலக்காய், கிராம்பு போன்றவற்றையும் இலைகளின் மீது தூவிக் கொள்ளலாம். பின்னர் சுத்தமான அகல் விளக்கு ஒன்றை மஞ்சள், குங்குமம் தடவி நடுவில் வையுங்கள். அதில் நெய்யை ஊற்றுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் தவிர வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்த வேண்டாம்.

பின்னர் பஞ்சு திரி இட்டு வடக்கு அல்லது கிழக்கு நோக்கி தீபமேற்ற வேண்டும். கிழக்கில் மகாலட்சுமியும், வடக்கில் குபேரனும் இருக்கின்றனர். தீபம் ஏற்றிய பின்பு தீபத்திற்குள் பச்சை கற்பூரம், கற்கண்டு, டைமண்ட் கற்கண்டு போன்றவை இருந்தால் அதனையும் சேர்த்து கொள்ளுங்கள். இவை அத்தனையும் நமக்கு செல்வத்தையும், பணத்தையும் ரூடவ்ர்த்து தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த பொருட்கள் ஆகும்.

வியாழக்கிழமையில் குபேரனுக்கும், வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கும் இந்த மருதாணி இலையில் தீபம் ஏற்றி வைக்கலாம். அந்தந்த கிழமைகளில் அவரவருக்கு உரிய மந்திரங்களை உச்சரித்தல் நல்லது.

இப்படி வளர்பிறையில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வர உங்கள் வாழ்க்கையில் இருந்துவந்த தடைகள் அகன்று, செல்வ செழிப்பு பன்மடங்கு பெருகும். மேலும் பணவரவிற்கு என்றுமே குறைவிருக்காது. வறுமை ஒழியும். சுபகாரியங்கள் கைகூடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad