Type Here to Get Search Results !

Translate

அழகான மனைவி அமையும் யோகம் யாருக்கு?

அழகான மனைவி அமையும் யோகம் யாருக்கு?

அழகான மனைவி அமையும் யோகம் யாருக்கு?

ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது மனைவியின் அழகு, யோகம் வசதி வாய்ப்புகள் பற்றி குறிக்கக் கூடியதாகும். ஏழாம் அதிபதி, ஏழில் உள்ள கிரகம், களத்திரக்காரகன் சுக்கிரன் இவர்கள் மூவரும் ஆட்சி, உச்சம், நட்பு வீட்டில் இருந்து, இவர்கள் இருக்கும் இராசிக்கு அதிபதியும் உச்சம், நட்பு வீட்டில் இருந்து, இவர்கள் 2,11,4,5,7,10,9 போன்ற இடங்களில் சுபகிரங்களின் பார்வை பெற அழகான மனைவி அமையப் பெறும் யோகம் கிடைக்கும்.

மனைவியால் நன்மைகள் கிடைக்கும் அமைப்புகள் :

ஜாதகத்தில் 7ம் இடத்திற்கு ஐந்தாம் இடம் இலாபஸ்தானம் ஆகும். ஐந்தாம் இடம், அதிபதி, கிரகம் இவைகளால் மனைவி மூலம் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறியலாம். இந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திர, திரிகோணங்களில் இருந்து அமையப் பெற்றால் மனைவியால் நன்மைகள் கிடைக்கும்.

ஏழாம் இடத்திற்கு பதினோராம் வீடு ஜாதகரின் ஐந்தாம் வீட்டை குறிக்கும். ஏழாம் இடத்திற்கு இரண்டாம் அதிபதி ஜாதகரின் இலக்கனத்திற்கு எட்டாம் அதிபதியைக் குறிக்கும். அதாவது இருவர் ஜாதகத்தில் 5,8ம் அதிபதிகள் சம்பந்தம் பெற்று பலமாக இருப்பின் அவரது மனைவியால் செல்வம் பெறுவர்.

7ம் இடத்திற்கு இலாபாதிபதி, ஏழாம் இடத்திற்கு இரண்டில் இருந்தாலும், அல்லது ஏழாம் இடத்திற்கு இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டாலும் மனைவியின் செல்வத்தை ஜாதகர் அனுபவிப்பார்.

ஏழாம் இடத்திற்கு, இரண்டு, பதினோராம் அதிபதிகள் இருக்கும் வீட்டின் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரிகோணம், இரண்டு அல்லது பதினோரம் இடத்தில் இருந்தால் மனைவியால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மனைவி உத்தியோகம் பார்ப்பவராக இருப்பார்.

மனைவி உத்யோகம் பெறக்கூடிய அமைப்பு :

ஜாதகத்தில் 8ம் இடமும் அதன் அதிபதியும் பலம் பெற ஆட்சி, உச்சம் பெறுமானால் மனையின் செல்வத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் யோகம் அமையும். மனைவியின் உதவியால் வீட்டோடு மாப்பிள்ளையாகும் அமைப்பு ஏற்படும்.

7ம் வீட்டின் அதிபதி இரண்டாம் இடத்தில் அமையப்பெற்றால் மனைவியின் மூலம் செல்வம், மனைவியின் மூலம் உதவி மற்றும் மனைவி உத்யோகம் பார்ப்பதால் பெறும் செல்வத்தை அனுபவிப்பவராக கணவன் இருப்பார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad