ஜாதகம் யோகம் ஒரு சிறப்புப் பார்வை!.
ஜாதகம் என்றால் என்ன?
ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறக்கும் போது, பிறந்த ஊரை மையமாகக் கொண்டு 12 கிரகங்கள் அமைந்துள்ள டிகிரி வைத்து கட்டங்கள் குறிக்கப்படுவது ஆகும். அதனை ராசிக்கட்டங்கள் என்பர். இதுவே ஜாதகம் ஆகும். பூமியை ஆதாரமாகக் கொண்டு அதனை சுற்றியுள்ள அண்ட வெளியை 12 பாகங்களாக (12 ராசிகள்) பிரித்து எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்தும்.
கடவுளை அடையும் ஜாதகம் :
சாங்கிய யோகம் உள்ள ஜாதகம், கடவுளை அடையும் ஜாதகம் ஆகும். இந்த வகையான ஜாதகத்தில் 4, 9ஆம் இடத்தில் அனைத்து கிரகமும் அமைய பெறுவது ஆகும். வீரமும், தீரமும், ஒழுக்கமும், தவமும் நிரம்பப் பெற்று எதனையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஒழுக்கத்தில் உத்தமராகவும், அறிவில் சிறந்தவராகவும், தவத்தில் முனிவராகவும், இரக்கத்தில் வள்ளலாராகவும் இருப்பார்கள். இவர்களை நடமாடும் தெய்வம் என்று சொல்லலாம்.
செல்வம் ஏராளம் சேர்த்திருந்தாலும் நல்ல மனைவி மக்கள் குடும்பம் என அமைந்தாலும், இவைகள் அனைத்தையும் உதறிவிட்டு ஞான மார்க்கம் போகும் வல்லமை இத்தகைய ஜாதகருக்கு ஏற்படும். இதைத்தான் சாங்கிய யோகம் என்று சொல்கிறோம். இந்த யோகம் வாய்க்கப் பெற்றவர்களே கடவுளிடம் செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்.
ராஜயோக ஜாதகம் :
ராஜயோக ஜாதகர்கள் நிறைய செல்வம், அரசின் உயர்ந்த பதவி, அரசின் ஆதரவு, ஏராளமான செல்வம், சொகுசான வாழ்க்கை, உச்ச புகழ், துணிச்சல் மிகுந்த வீரம் இத்தனையும் வாய்க்கப் பெற்றவர்கள் ஆவார்கள். சனி 6ல் இருந்தால் ஏராளமான பணியாளர்கள், செவ்வாய் 6ல் இருந்தால் மிகுந்த வீரம், எதிரிகளை வெல்லும் வல்லமை, சந்திரன் உச்சம் பெற்றால் மிகுந்த துணிச்சல் இப்படி ஒவ்வொரு விஷயமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
ஜாதகத்தில் திருமணவிதி :
திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான். ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் உச்ச நிலையிலும் திருமணம் நடக்கும். ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்.
சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ;டப்படுகின்ற, ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள். இப்படி இன்னும் ஏராளமான விதிகள் இதற்கென்று ஜோதிடத்தில் இருக்கின்றன.
குரு மங்கள யோகம் :
குருவுக்கு 1,4,7,10ல் செவ்வாய் இருந்தால் அது குரு மங்கள யோகம் ஆகும். இந்த ஜாதகர்கள் நிலம், வீடு, வண்டி, வாகனம், பூமி இந்த விஷயங்களில் நல்ல யோகம் கிடைத்து சமூகத்தில் சிறந்து விளங்குவர்.
கஜகேசரி யோகம் :
சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருந்தால் அது கஜகேசரி யோகம் எனப்படும். (கஜம்ஸ்ரீயானை, கேசரிஸ்ரீசிங்கம்) நீண்ட ஆயுள், புகழ், செல்வம், பதவி, செல்வாக்கு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, காரிய வெற்றி போன்றவகளில் நற்பலன் அமையும்.
குரு சந்திர யோகம் :
குரு சந்திர யோகம் குருவுக்கு 1,5,9ல் சந்திரன் இருந்தால் அது குரு சந்திர யோகம் எனப்படும். உயர்ந்த அந்தஸ்து, பெருமை, புகழ் போன்ற நல்ல பலன்கள் உண்டாகும்.
கோடீஸ்வர யோகம் :
குருவும், கேதுவும் சேர்ந்து அமைந்து இருப்பது கோடீஸ்வர யோகம் எனப்படும். அல்லது குரு கேதுவை பார்வை செய்தாலும் இந்த யோகம் ஏற்படும். இதனால் திடீரென அதிர்ஷ்டம் ஏற்படும். இதனால் ஏராளமான செல்வம் சேரும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு வரும்.