அடங்காத மனைவி யாருக்கு
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பெரியோர் கூறுவார்கள். இது உண்மைதான். ஒரு ஆண்மகன் என்னதான் முயன்றாலும் நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தேடினாலும் முரட்டு குணமும், மூர்க்க எண்ணமும் கொண்ட மனைவி அமைந்து விடுவது விதி செய்யும் சதியே.
யாருக்கு முரட்டு மனைவி அமைகிறது.
ஜோதிடத்தில் ஒரு ஆணின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ல் சனி இருந்தாலோ, லக்கினத்தில் சனி இருந்தாலோ, லக்கினத்தில் செவ்வாய் அல்லது 7-ல் செவ்வாய் இதில் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் இப்படிபட்ட ஜாதகனுக்கு (ஆணுக்கு) முரண்டு பிடிக்கும், பிடிவாதம், முன்கோபம் கொண்ட எப்போதும் எவரையும் எதிர்த்து பேசுகிற மனைவி அமைவாள்.
7-க்குடையவன் சனியாகவோ, செவ்வாயாகவோ இருந்தால் அதுவும் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்தால் தினமும் சண்டை சச்சரவுதான்.
பொதுவாக 7-க்குடையவன் சுபராக இருந்தால் அந்த ஜாதகருக்கு நன்மையே செய்வான். அல்லது சுபர் பார்வை பெற்றாலும் நன்மைதான்.
மணமகன்களே..... உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தை பாருங்கள். அதனுடைய பலனை அறிந்து கொள்ளுங்கள். நரி திண்ண கோழி எப்படி கூவாதோ அதுபோல உங்கள் ஜாதகம் என்னவோ அப்படிதான் உங்களின் மனைவி அமைவாள்.