1. கணவன், மனைவி ஒரே லக்னமாக இருந்தால் என்ன பலன்?
கணவன், மனைவி ஒரே லக்னமாக இருந்தால் புரிதல் உணர்வு மேம்படும்.
இருவருக்கும் இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
2. மேஷ ராசி, மிதுன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
நகைச்சுவையாக பேசி காரியத்தை முடிக்கும் வல்லவர்கள்.
சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.
பொறுப்புணர்ச்சி கொண்டவர்கள்.
எதிர்பார்த்த திருமண வாழ்க்கை அமையும்.
3. ஐயா என் தந்தை இறந்து ஒரு மாதம் ஆகின்றது. நான் திருப்பதி, பழனி போன்ற கோவில்களுக்கு செல்லலாமா?
தந்தை இறந்து ஒரு வருடம் முடியும் வரை மலைக்கோவிலுக்கு செல்லக்கூடாது.
4. மாங்கல்யம் பலம் பெற்று கணவர் நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?
வயதில் மூத்த தம்பதிகளிடம் ஆசி பெறுதல்.
காரடையான் நோன்பு இருத்தல்.
வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரவார விரதம் இருத்தல்.
திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரரை வழிபட்டு வருதல் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.