நிபந்தனை தியானங்கள் - Meditation of Conditions
நிபந்தனை தியானங்கள் - Meditation of Conditions
இதுவரை
கூறப்பட்ட தியானங்கள் பொதுவாக சாம மந்திரங்களின் ஐந்துவித பக்திகள் அல்லது ஏழுவித
பக்திகளின் மீது செய்யப்பட்டன. இனி வருகின்ற 11 முதல்
21 வரையுள்ள 10 பகுதிகளில்
வரும் தியானங்களும் ஐந்துவித பக்திகளில்தான் செய்யப்படுகின்றன. ஆனால்
இவற்றிற்கென்று சில தனிப் பண்புகள் உள்ளன:
1. ஒவ்வொரு தியானத்துடனும் ஒரு குறிப்பிட்ட
நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும்.
2. ஒவ்வொரு தியானத்திற்கும் தனிப்பெயர்
தரப்பட் டுள்ளது. ஆனால் இந்தப் பெயர்களுக்கும் தியானங்களுக்கும் என்ன தொடர்பு
என்பது தெரியவில்லை.
3. ஒவ்வொரு தியானத்தின் பலனும் தனித்தனியாகத்
தரப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றாகக் காண்போம்.
காயத்ர ஸாம தியானம் (புலன்கள் மற்றும் பிராணனைத் தியானித்தல்
ஹிங்காரம் |
மனம் |
பிரஸ்தாவம் |
வாக்கு |
உத்கீதம் |
கண் |
பிரதிஹாரம் |
காது |
நிதனம் |
பிராணன் |
இது காயத்ர ஸாம தியானம்; புலன்கள் மற்றும் பிராணனுடன் தொடர்புடையது.
பலனும் நிபந்தனையும்
புலன்கள் மற்றும் பிராணனுடன் தொடர்புடைய இந்த காயத்ர ஸாம தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவனது புலன்களும் பிராணனும் ஆற்றலுடன் செயல்படுகின்றன. அவன் முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடை செல்வத் துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாகவும்
புகழுடனும் திகழ்கிறான்.
இந்தத் தியானம் செய்பவன் தாராள மனம் படைத்தவனாக இருக்க வேண்டும் இதுதான் நிபந்தனை.