![]() |
புத்திர தோஷமும் பரிகாரங்களும் |
புத்திர தோஷமும் பரிகாரங்களும்
புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது அவசியம். புத்திரஸ்தானமான 5 ஆம் பாவம் பாதிக்கப்பட்டால், குழந்தை யோகம் உண்டாகத் தடை உண்டாகும்.
பரிகாரங்கள் :
குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும். வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் மற்றும் முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகி புத்திர பாக்கியம் உண்டாகும்.
பௌர்ணமி, தமிழ்மாதம் பிறப்பு, தமிழ்வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும்.
திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும்.
குலதெய்வம் கோயிலில் அவரவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் புத்திரத்தடை நீங்கும்.
எந்த தோஷம் இருந்தாலும், பிரதோஷத்தில் நீங்கி விடும். பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும்.