நாக தோஷமும் அதற்கான பரிகாரமும்
நாக தோஷம் என்பது முன் ஜென்மத்தில் நாகத்தினை துன்புறுத்தியிருந்தால், அல்லது நாகத்தினை அடித்திருந்தால், நாகங்களுக்கு இடையுறாக இருந்திருந்தால் தோஷம் ஏற்படுவது நாக தோஷம். நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான பரிகாரங்களை இங்கு பார்ப்போம்.
பரிகாரங்கள் :
- தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட்டால் தோஷம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
- பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்கினால் தோஷம் விலகி கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு உண்டாகும்.
- உப்பு காணிக்கை செலுத்தினால் நாக தோஷம் விலகி உடல் நலம் பெறும்.
- மஞ்சள் காணிக்கை செலுத்தினால் நாக தோஷத்தின் விஷத்தன்மை நீங்கும்.
- நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தினால் நாக தோஷத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வு பெறலாம்.
- மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைத்தால் தோஷத்தினால் எற்ப்பட்ட குறைகள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- நாக தோஷ பரிகாரத்திற்கு மஞ்சள் பொடி காணிக்கை, பால் - பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.