விரைவில் வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
வேலைதான் ஒருவருக்கு மரியாதையையும், சமூகத்தில் அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. அதேபோல் அவருடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவர்கள் செய்யும் வேலைதான். எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைத்து விடும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், ஜாதகத்தில் அரசாங்க வேலை பெறுவதற்குரிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது அமையும். விரைவில் வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.பரிகாரம் :
நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்சனைகள் விலக ஶ்ரீ பைரவரை ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன் கிடைக்கும்.
அரியக்குடி தென் திருவேங்கட முடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.
அருள்மிகு ராமநாதர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிரகதீஸ்வரர் கோயில் பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் ஆகிய கோயிலுக்கு சென்று வழிபட வேலை கிடைக்கும்.
அரச மரத்திற்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வந்தால் நினைத்த வேலை கிடைக்கும்.
அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் வேலை கிடைக்கும்.
பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றினால் வேலை கிடைக்கும்.
காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூரமாக எறிந்து விட வேண்டும்.
புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். வேலை கிடைப்பதில் ஏற்படும் தடைகளை நீக்கிவிடும்.