யாருக்கு அரசு வேலை கிடைக்கும்?
எந்த மாதிரி அமைப்புகள் உள்ளவர்களுக்கு அரசு வேலை யோகம் உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் 10ம் இடத்தை தொழில் ஸ்தானம் ஜீவனஸ்தானம் என்பார்கள். ராஜ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சூரியன் சனிபகவான் குரு செவ்வாய் இந்த கிரகங்கள் ராசிக்கட்டத்தில் ஒன்றாக இருந்து நவாம்சத்தில் நீச்சமடையக்கூடாது.அடுத்து காலபுருசுவத்தத்துவத்தின்படி 10ம் இடமான மகரத்தில் உச்சம் பெறக்கூடிய கிரகம் செவ்வாய். அப்போது ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு 10ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு அரசு வேலை உண்டு.
அடுத்து 10ம் வீட்டில் திக்பலம் பெறும் கிரகம் சூரியன். அப்போது ஒருவர் ஜாதகத்தில் சூரியன் 10 ல் இருந்தால் அரசு வேலைக்கான யோகம் இந்த ஜாதகருக்கு உண்டு. அடுத்து காலப்புருசுத்துவத்தின்படி 9 ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு அதிபதி குருபகவான்.
கர்மஸ்தானம் ஜீவனஸ்தானத்தின் அதிபதி சனிபகவான். அப்போது குருவும் சனிபகவானும் சேர்ந்து ஒருவர் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் அவருக்கு அரசு வேலை கிடைக்கும். அடுத்து ராஜ கிரகங்கள் சூரியன் செவ்வாய் குரு ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் அமர்ந்திருந்தாலும் சனிபகவான் திரிகோணத்தில் அமர்ந்திருந்தாலும் ஜாதகருக்கு அரசு வேலை கிடைக்கும்.
ஒருவர் ஜாதகத்தை பார்த்தவுடன் இந்த ராஜ கிரகங்களை வைத்து அரசு வேலை கிடைக்குமா? இல்லையா? என்று சொல்லிவிட முடியும். நான்கு கிரகங்கள் ராஜ கிரகங்கள் நான்கும் இராசிக்கட்டதில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நவாம்சத்திலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்து தசாம்சத்திலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அமையப்பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்.