வேலை கிடைக்க |
திருப்பைஞ்ஞீலி சென்று கல் வாழை பூஜை செய்து வர சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
திருநாராயணபுரம் சென்று வேத நாராயணப் பெருமாளை வழிபட்டு வர திருமணத் தடைகள் நீங்கும்.
வேதநாராயணப் பெருமாளை வழிபடும்போது அவருக்கு துளசி மாலை அணிவித்து 27 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வேதநாராயணப் பெருமானின் வழிபாட்டை வியாழக்கிழமையன்று அல்லது திருமணத் தடை உள்ளவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று செய்வது சிறப்பைத் தரும்.
2. வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
விஷ்ணுவின் அவதாரங்களை வழிபட்டு பின் வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
நேர்மறை எண்ணங்களுடன் வேலைக்கு முயற்சி செய்தால் கண்டிப்பாக இறைவனின் அருளால் வேலை கிடைக்கும்.
3.முன்பின் தெரியாத நபர்களை காண்பது போலவும், புதிய இடங்களில் பயணம் செய்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
புதிய நபர்களை கனவில் காண்பது தன வரவுகள் ஏற்படுவதை குறிக்கிறது.
புதிய இடங்களில் பயணிப்பது போன்ற கனவு வருவது அறிமுகம் இல்லாத புதிய நபர்களால் உதவிகள் கிடைப்பதை குறிக்கிறது.