இடுப்பு வலி,இடுப்பு சதை பிடிப்பு ,மூட்டு வலிகள்
குணமாக சித்த மருத்துவம்.
- இடுப்பு வலி குணமாக கோதுமை மாவுடன் தேன் மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.
- மிளகு, பூண்டு, சுக்கு, பனைவெல்லம், பொடுதலை இவைகளை மைபோல் அரைத்து காலையில் மட்டும் சாப்பிட இடுப்பு வலி குறையும்.
- இடுப்பு சதை குறைய அன்னாசிப் பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து வேகவைத்து வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும்.
- இடுப்பு புண் குறைய கடுக்காய், மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை எடுத்து வெங்காயச்சாறு விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். இரவு படுப்பதற்கு முன் புண்கள் உள்ள இடத்தில் கனமாக பூச வேண்டும். காலையில் கடலை மாவை தலையில் தேய்த்து கால் மணி நேரம் கழித்து குளித்து தலையில் சிறிது கூட ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் இடுப்பில் உள்ள புண்கள் குறையும்.
- இடுப்பு நரம்புகள் பலப்பட உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.
- இடுப்பு பிடிப்பு குறைய பொடுதலை இலை, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். இவ்விதமாக 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும்.
- மூட்டு வலி,இடுப்பு வீக்கம் குணமாக நொச்சி இலை,உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்து வர மூட்டு வலி,இடுப்பு வீக்கம் குணமாகும்.
- இடுப்பில் புண் குணமாக கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்.
- இடுப்பு மற்றும் மூட்டு வலி கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேனை கலந்து சாப்பிட்டு வர இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாகும்.