அஜீரண கோளாறுகளால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும்
தீர சித்த வைத்திய முறைகள்
குப்பை மேனி சாற்றில் உப்பு சேர்த்து காய்ச்சி மோரில் கலந்து கொடுக்க அஜீரணம் குறையும்.முருங்கைக் கீரையைச் சுத்தம் செய்து சட்டியில்போட்டு சமஅளவு உப்பையும் சேர்த்து அடுப்பில்வைத்து வறுக்கவும். கருகி தீப்பற்றும் சமயம், இறக்கி ஆறவைத்து பவுடராக்கிப் பாட்டிலில் அடைத்து பத்திரபடுத்தவும். அஜீரணம் ஏற்படும் சமயம் 2 சிட்டிகைப் பவுடரை வாயில் போட்டு வெந்நீரைப் பருகவும்.வெண்கடுகு இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.பாகல் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து,நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று அஜீரணம் குறையும்.வெற்றிலைகளை எடுத்து அதனுடன் சீரகம்,சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்பேரரத்தை இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி,ஒரு ஸ்பூன் குடித்தால் அஜீரணம் குறையும்.சாத்துக்குடி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் அஜீரணம் குறையும்.சீரகம், கொத்தமல்லி சாறு கலந்து, சிறிது உப்பு போட்டு குடித்தால் அஜீரணம் குறையும்.ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும்.கடுகை அரைத்து அதனுடன் மிளகு பொடி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர அஜீரணக் கோளாறு குறையும்.துளசி ரசம் 10 மி.லியுடன் சிறிதளவு உப்பை கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.இளம் சூடான வெந்நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறை ஊற்றி காலையில் குடித்து வந்தால் அஜீரணம் குறையும். தோல் நோய்களும் குறையும்.ஓமத்தை பொடி செய்து சிறிது இந்துப்பு சேர்த்து கலந்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.வசம்பை எடுத்து நன்றாக இடித்து தூள் செய்து நீரை சூடேற்றி அதில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு எடுத்து வடிகட்டி தினமும் குடித்து வந்தால் வாயு , பசியின்மை போன்ற அஜீரண கோளாறுகள் குறையும்.ஓமம், சீரகம், மிளகு, கருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, சுக்கு ஆகியவற்றை நல்லெண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்து தினசரி பகல் உணவின் போது இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு பிடி சாதத்தில் சோ்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.சிறுநாகப்பூ, கொத்தமல்லி, திப்பிலி, வில்வவேர், வில்வப்பட்டை, கோரைக் கிழங்கு, துளசி வேர் ஆகியவற்றை எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுக் குறையும்.ஓமம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, பிரண்டை ஆகியவற்றை சேர்த்து இடித்து அரைப்படி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு குறையும்.கிராம்பு, சுக்கு சமஅளவு எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து சர்பத் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவேண்டும். இதை காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.வாயு குறைய நெல்லிக்காய் சாறுடன் கடுக்காயை அரைத்து சாறு பிழிந்து சேர்த்து குடித்து வந்தால் அஜீரணம், வாயு குறையும்.அஜீரணக் கோளாறு சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி ஆகியவற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.சீரகம்,மிளகு சேர்த்து வறுத்துசூரணமாக்கி நெய்யில் கொடுக்க அஜீரணம் குறையும்.ஜீரணமாக கருந்துளசி சாறெடுத்து குடிக்க அஜீரண கோளாறு குணமாகும்.நாவல் கொழுந்துச் சாறு, லவங்கப்பட்டைத் தூள், ஏல அரிசி ஆகியவற்றை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உணவு செரியாமை குறையும்.- வயிற்று கோளாறுகள் குறைய,அஜீரண கோளாறுகள் குறைய, உடல் வலிமை பெற
வயிற்று கோளாறுகள் குறைய நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சதக்குப்பை விதை மற்றும் வசம்பு ஆகியவற்றை இடித்து பொடி செய்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.- அஜீரணம், வாய்வு, இரைப்பை புண்கள் குறைய
இரைப்பை புண்கள் குறைய சோம்பை நீர் விட்டு காய்ச்சி இறக்கி இரவு அதை மூடி வைத்து விட்டு காலையில் எடுத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் அஜீரணம், வாய்வு, இரைப்பை புண்கள் ஆகியவை குறையும்.- வயிற்று கோளாறுகள் குறைய,அஜீரண கோளாறுகள் குறைய, உடல் வலிமை பெற
வயிற்று கோளாறுகள் குறைய மிளகை எடுத்து இடித்து பொடி செய்து சலித்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறுகள் குறைந்து வயிற்று கோளாறுகள் குறையும்.- செரியாமை, தோல் நோய்கள் தீர
செரியாமை, தோல் நோய்கள் தீர நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்.அஜீரணம் வராமல் தடுக்க சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை இந்துப்பு ஆகியவற்றை எடுத்து வறுத்து பொடித்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்படும்.- அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குறைய
இஞ்சியை துண்டுகளாக வெட்டி வறுத்து பிறகு அதில் நீர் சேர்த்து கொதித்ததும் தேன் விட்டு நன்றாக காய்ச்சி இறக்கி வடிகட்டி குடித்து வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்.உணவு செரியாமை குறைய நன்னாரி வேர் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவு செரியாமை குறையும்.சிறுநாகப் பூ, சித்திரமூல வேர் ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை கொதிக்க வைத்து குடிக்க அஜீரணம் குறையும்.