Type Here to Get Search Results !

Translate

ஆஸ்துமா, மார்புச் சளி ,இரப்பிருமல் தீர ,சுவாச நோய்கள் குணமாக சித்த வைத்தியம்

ஆஸ்துமா குணமாக


ஆஸ்துமா, மார்புச் சளி ,இரப்பிருமல் தீர ,சுவாச நோய்கள் 
குணமாக சித்த வைத்தியம் 
  • ஆஸ்துமா குறைய வெங்காயச்சாறு, கற்றாழைச்சாறு, இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் சுத்தமான தேன் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இதை நன்றாக மூடி பூமிக்கு அடியில் புதைத்து வைத்து பின்னர் அதை வெளியே எடுத்து குடித்து வந்தால் ஆஸ்துமா குறையும்.
  • ஆஸ்துமா குறைய நாட்டு மெழுகு, குங்கிலியம் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து நன்றாக பொடித்து இதனுடன் சம அளவு நெய் கலந்து தனலில் போட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்து வந்தால் ஆஸ்துமா குறைந்து மூச்சு விடுவது எளிதாகும்.
  • ஆஸ்துமா குறைய இந்துப்பை பொடி செய்து கடுகு எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து அந்த எண்ணெயை மார்பு பகுதியில் தடவி வந்தால் ஆஸ்துமா குறையும்.
  • ஆஸ்துமா குறைய ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் இரவு வறுத்த கொண்டைக்கடலை சிலவற்றை சாப்பிட்டு வெதுவெதுப்பான பால் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.
  • ஆஸ்துமா குறைய நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு ஆகியவற்றை நன்கு மென்று தின்றால் ஆஸ்துமா குறையும்.
  • ஆஸ்துமா குறைய ஜடமான்சி வேர், கண்டங்கத்தரி வேர் மற்றும் சுக்கு ஆகியவற்றை எடுத்து நொச்சி இலைச்சாறு விட்டு அரைத்து பிறகு நல்லெண்ணெய் விட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் ஆஸ்துமா குறையும்.
  • ஆஸ்த்மா குறைய ஆடாதோடை இலை, தேன் இவைகளை அருந்த ஆஸ்த்மா குறையும்.
  • ஆஸ்துமா நோய் குறைய ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.
  • ஆஸ்துமா,இரப்பிருமல் தீர பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
  • ஆஸ்துமா குணமாக வில்வ இலை பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணமாகும்.
  • ஆஸ்துமா தீர சிறுகுறிஞ்சா வேர் பொடி ,திரிகடுகு பொடி வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
  • ஆஸ்துமா தீர நொச்சி இலை,மிளகு,லவங்கம்,பூண்டு மென்று முழுங்கலாம்.
  • சுண்டைக்காயை உப்பு நீரில் ஊறவைத்து காய வைத்து வறுத்து சாப்பிட ஆஸ்துமா, மார்புச் சளி தீரும்.
  • ஆஸ்துமா குணமாக வில்வ இலைப் பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குணம் பெறலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad