![]() |
Astro Jothidam |
காகத்திற்கு உணவு வைப்பதன் ரகசியம் !
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். காகம் எமலோகத்தின்
வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன்
என்றும் சொல்லப்படுகிறது. நாம் உணவு உண்ணும்
முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். ஏனெனில் நம்முடைய முன்னோர்கள்
காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
மேலும் காகத்திற்கு உணவு வைத்தால் எமலோகத்தில்
வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. நாம் வைத்த உணவை காகம் தீண்டாவிட்டால்
இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.
முன்னோர்களின் ஆசியினால் தான் நாம் இவ்வுலகில்
அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிட வேண்டும் என்ற
பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில்
எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. காகம் சனீஸ்வர பகவானின் வாகனம்
என்பதால் காகத்திற்கு
உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின்
பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.
காகத்திற்கு உணவு வைத்தால் தேக ஆரோக்கியம் சீராகும்.
மேலும் காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை அழைக்கும்போது காகம் வந்து வீட்டின்
மேற்கூரையிலோ அல்லது மரக்கிளைகளின் மீதோ வந்து அமரும். நாம் வைத்த உணவையும்
சாப்பிட்டு, நம் வீட்டினுள் ஏதேனும்
பூச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று
அப்புறப்படுத்துகிறது.
இதனால் நோய்க்கிருமிகள்
நம்மைத் தாக்காதிருக்க உதவுகிறது. காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, ஒரு காகம் தன் கூட்டத்தையே அழைத்து உணவை
பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் பொழுது நாமும் ஒற்றுமையாக இருக்க
வேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. காகத்திற்கு உணவு வைப்பதால்
முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும்.
சனிபகவானின் அருளும் கிடைக்கும்.