Type Here to Get Search Results !

Translate

தீராத கடனும் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்..!

தீராத கடனும் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்..!
தீராத கடனும் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்..!

தீராத கடனும் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்..!

விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்ன நிர்ணய முகூர்த்தம் என பல வகையான முகூர்த்தங்கள் உள்ளன. அந்த வகையில் இவற்றில் யாருமே அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உள்ளது. இந்த முகூர்த்தம் , கடன்களை அடைக்க உகந்த நேரமாக உள்ளது.


மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேர்கின்ற நாளில் மேஷ லக்னம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேர்கின்ற நாளில் விருச்சிக லக்னம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்னமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 சதவித பலன்களை பெறலாம். ஆனால் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து அமைந்தால் நிச்சயமாக
முழுப்பலன்களையும் பெறலாம்.

எப்போது கடன் வாங்கக்கூடாத ?

ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு 6-ம் பாவமான கன்னியில் அல்லது 6-ம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்கக்கூடாது.

குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே 6-ம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார்.

குரு சர்ப்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்யக்கூடாது.

ஏழரை சனி, அஷ;டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும் போது கடன் வாங்க முயற்சி செய்யக்கூடாது.

சந்திரன் பலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. முக்கியமாக செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன தீர்வு?

கடன் தீர்ப்பதில் கேது பகவானும், செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்
பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதையான விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதையான முருகனை வணங்குவது , கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது போன்றவை விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.

கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு , குச்சனூர், சனி சிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலத்திற்கு அவ்வப்போது சென்று வரவேண்டும். மேலும் சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்ய வேண்டும்.

ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும்.

ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad