Type Here to Get Search Results !

Translate

எந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்?

Astro Jothidam
Astro Jothidam

எந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்?

ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு. அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் நன்மை கிட்டும்.

கோவிலை வலம் வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மை கிடைப்பதாக ஐதீகம்.

எந்த கோவிலை சுற்றினால் பலன் :

விநாயகரை நாம் ஒரு வலம் வந்து வணங்கினாலே தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு நன்மை கிட்டும், வெற்றிகள் வந்து சேரும்.

முருக பெருமான் கோவிலில் ஆறு முறை வலம் வர வந்தால் எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலும், கூர்ந்த மதியும் திறமையும் கிடைக்கும்.

அம்பிகை பராசக்தியை வெள்ளி முதல் செவ்வாய் வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். மன அமைதி, வெற்றி கிட்டும்.

சிவபெருமானை ஐந்து முறை வலம் வந்து வணங்கினால் மீண்டும் பிறவா நிலை, செல்வ வளம் கிடைக்கும்.

திருமால் கோவிலில் மகாவிஷ;ணுவை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். இதனால் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, அஷ;டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

நவக்கிரக கோவில்களில் விக்ரகங்களை ஒன்பது முறை வலம் வரவேண்டும். இதனால் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கி, வாழ்க்கை பயனுள்ளதாக மாறும்.

இதை தவிர்த்து பதினோரு முறை, பதிமூன்று முறை, நூற்றியொரு முறை, நூற்றியெட்டு முறை வலம் வருதல், அங்க பிரதட்சணம் போன்றவை அவரவர் வேண்டுதலை பொருத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad