ஒரு மனிதன் இறக்கக் கூடாத நாட்கள்
செவ்வாய் வியாழன் வெள்ளி ஆகிய கிழமைகளில் இருப்பது நல்லது கிடையாது அப்படி இருந்தால் தனம் தானியம் துணி முதலியவற்றை அந்தக் கிழமைக்கு ஏற்றவாறு தானம் செய்ய வேண்டும்
வீடு மூட வேண்டிய நாட்கள்
சில நட்சத்திரங்களில் மரணம் ஏற்பட்டால் குறிப்பிட்ட சில மாதங்கள் அடைப்பு காலமாகும்
இக்காலத்தில் அவர் வீட்டில் உள்ளவர்கள் எந்த சுபகாரியம் செய்யக் கூடாது.
அவிட்ட நட்சத்திரத்தில் இறந்தால் ஆறு மாதமும் கார்த்திகை 3 மாதமும் ரோகிணியில் இருந்தால் ஐந்து மாதமும் சதயம் நட்சத்திரத்தில் இறந்தால் ஆறு மாதமும் புனர்பூசத்தில் மூன்று மாதமும் மகம் நட்சத்திரத்தில் இறந்தால் 5 மாதமும் புரட்டாதி நட்சத்திரத்தில் இறந்தால் ஆறு மாதமும் உத்திரத்தில் மூன்று மாதமும் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் இரண்டு மாதமும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆறு மாதமும் ரேவதியில் ஆறு மாதமும் சித்திரையில் இரண்டு மாதமும் விசாகத்தில் மூன்று மாதமும் உத்திராடத்தில் இறந்தால் மூன்று மாதமும் வீடு மூட வேண்டிய நாட்களாகும்
ஒருவேளை வேறு வழியின்றி ஏதாவது சுபகாரியம் செய்ய நேரிட்டால் ஒரு வெண்கலப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிராமணருக்கு தானம் செய்துவிட வேண்டும்