கொள்ளி வைப்பது யார்?
பிறவியில் மூத்தவனே புள்ளி வைக்கவேண்டும் அவன் இல்லாவிட்டால் இருப்பவர்களும் மூத்தவன் கர்மம் செய்ய வேண்டும் எல்லா பிரேத காரியங்களிலும் ஈரத் துணியுடன் இருக்க வேண்டும்
கொள்ளி வைப்பவர் அக்னியை சட்டியில் எடுத்துக்கொண்டு முதலில் புறப்பட வேண்டும் அக்னிக்கு பின் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றவர்கள் பிணத்துடன் தொடர்ந்து வரவேண்டும்
பிள்ளைக்கு இரண்டு வயதுக்குள் கர்மம் செய்ய நேரிட்டால்பக்கத்தில் இருக்கும் வேறு ஒருவர் செய்யலாம் 3 வயது முதல் 8 வயது வரை கொள்ளியை பையனே வைக்கச் சொல்லி மற்ற காரியங்களை பிறர் செய்யலாம்
நெருங்கிய உறவினர் அல்லாதோர் பாடையை சுமக்கக் கூடாது.
பிரேதத்தை வீட்டிலிருந்து பாடையை சுமக்கக் கூடாது மனைவி முதலிய பெண்கள் விரித்த தலையுடன் புழுதியை தலையிலும் தோள்களிலும் பூசிக்கொள்ள வேண்டும்
தகனம் செய்யும் இடத்தில் பிரேதத்தை தெற்குப் புறம் தலை இருக்கும்படி வைக்க வேண்டும் பிறகு கொள்ளி வைப்பவர் சிதையின் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கி நின்றுகொண்டு பிரேதத்தின் மார்பில் அக்னியை இடவேண்டும்
பிறகு சிதையின் வடக்குப் புறம் தெற்கு நோக்கி நின்றுகொண்டு அக்னியை தொழுது மூன்று முறை ஓம் என உச்சரிக்க வேண்டும்
பிறகு எல்லோரும் பூணூலை இடமாக போட்டுக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் சென்று தலை முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும். பின்பு உறவினர்களுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
அதன்பிறகு பத்தாவது நாளில் உரிய காரியங்களை செய்ய வேண்டும் பதினோராவது நாளில் வீட்டை பசுஞ்சாணத்தால் மொழுகி
புண்யாஹ வசனம் செய்யவும்.