வியாபாரம் மற்றும் தொழில் எப்படி அமையும்?
ஒருவருடைய ஜாதகத்தில் 10ம் இடம் மற்றும் அதில் உள்ள கிரகங்களை வைத்து, அந்த ஜாதகருக்கு எப்படிப்பட்ட வியாபாரம் மற்றும் தொழில் அமையும் என்பதை கணிக்க முடியும். அந்த வகையில் ஒருவருடைய ஜாதகப்படி எப்படிப்பட்ட வியாபாரம் மற்றும் தொழில் அமையும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஒருவருடைய ஜாதகத்தில் 10-ம் இடத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், 10-ம் இடத்தில் உள்ள கிரகங்களில் எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ, அந்த கிரகத்தின் தன்மைப்படி தொழில் அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் 10-ம் இடத்தில் கிரகங்கள் எதுவும் இல்லை என்றால், அந்த ஜாதகருக்கு 10-ம் இடத்தின் அதிபதியின் தன்மைப்படி தொழில் அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனில் இருந்து புதன், சுக்கிரன் 3, 12ல் இருந்தால், ஜாதகர் சுய வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டு.
ஒருவருடைய ஜாதகத்தில் 10-ம் அதிபதியுடன் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தன்மையைப் பொறுத்து தொழில் அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருந்து தன் பார்வையால் லக்னம் அல்லது லக்னாதிபதியை பாதிக்க செய்தால், இவர்களின் தன்மைப்படி தொழில் அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன், சுக்கிரன், குரு இவர்கள் தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு தனியாக தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் அமைப்பை பெறுவார்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தன்மைப்படியும் தொழில் அமையலாம்.
லக்னாதிபதி மற்றும் பாக்கியாதிபதி 8ல் இல்லாமல் இருந்தாலோ சனி, 10 அல்லது 8ல் இல்லாமல் இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு சுய தொழில் அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் 11ல், 11-க்கு உடையவன் ஆட்சி பெற்றால், அந்த கிரகத்தின் தசாபுத்தி காலங்களில் தொழில் செய்யக்கூடிய அமைப்பு உருவாகும்.
அதேபோல் தன ஸ்தானத்தில் தனாதிபதி இருந்தாலும், 10க்கு தனாதிபதி சம்பந்தம் இருந்தாலும், தன லாபாதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றாலும் வாணிகத் தொழில் நன்றாக அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் கிரகமானது 7ஆம் பாவத்துடன் சம்பந்தப்பட்டால், அந்த ஜாதகர் கூட்டு வியாபாரம் செய்யும் அமைப்பைக் கொடுப்பார்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியின் 11ஆம் அதிபதியின் தன்மைப்படி தொழில் அமையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் சம்பந்தப்பட்ட பாவம் மற்றும் அதன் அதிபதி அனுகூலமாக அமைந்தால், அந்த ஜாதகருக்கு வாணிகத்தால் அதிக லாபம் பெறுவார்.
6,8,12ல் எந்த கிரகங்களும் இல்லாமல் இருந்தாலோ அல்லது அவைகள் ஆட்சி, உச்சம் பெற்றாலோ, அந்த ஜாதகருக்கு சுய தொழில் செய்யும் அமைப்பு உண்டு.
ஒருவருடைய ஜாதகத்தில் புதன், சுக்கிரன், சந்திரன், 2க்கு 2ல் இருந்தாலும் அல்லது 12ல் இருந்தாலும் சொந்தமாக வியாபாரம் செய்யும் அமைப்பு ஏற்படும்.