Type Here to Get Search Results !

Translate

உங்களின் ஜாதகப்படி உங்களுக்கு வெற்றியை தரும் தொழில் இதுதான் !!

ஜாதகப்படி உங்களுக்கான தொழில்கள்
ஜாதகப்படி உங்களுக்கான தொழில்கள் 

உங்களின் ஜாதகப்படி உங்களுக்கு வெற்றியை தரும் தொழில் இதுதான் !!

சூரியன் முதல் ராகு, கேது வரையிலான ஒன்பது கிரகங்களும் சில தொழில்களுக்கு காரகத்துவம் பெற்று விளங்குகின்றன. அதன்படி உங்கள் ஜாதகத்தில் எந்த
கிரகத்தின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கிறதோ அதற்கான தொழிலை நீங்கள் செய்தால் வெற்றி நிச்சயம்.

சூரியன் :

கம்பளி ஆடைகள், காவல் துறை, ராணுவம், பொன், மருந்துப்பொருட்கள், வணிகம், ஐ.ஏ.எஸ். - ஐ.எஃப்.எஸ் போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் முழு கவனத்துடன் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

சந்திரன் :

ஜவுளி வியாபாரம், உப்பு காய்ச்சுதல், பால் வியாபாரம், விவசாயம், மீன் பிடித்தல், கப்பல் கட்டும் துறை, கடற்பயணம், உப்பு காய்ச்சுதல், ஆலைத்தொழில் போன்றவற்றில் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

செவ்வாய் :

ரியல் எஸ்டேட், விவசாயம், டிரைவர், ஆயுதத் தளவாடத் தொழில், காவல் துறை, ராணுவம், பாதுகாப்புத் துறை, மருத்துவம், லேத் பட்டறை, விளையாட்டுத் துறை, பொறியியல் துறை, பைலட், கேட்டரிங் போன்றவற்றுள் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

புதன் :

தகவல் தொடர்பு துறை, பத்திரிகைத்துறை, அச்சுக்கூடம், ஆசிரியப் பணி, ஜோதிடத் துறை, கான்ட்ராக்ட் ஏஜென்சி, கூட்டுறவு நிறுவனங்கள், ஸ்டேஷனரி, பேச்சாற்றல், கவிதை, நாவல் இயற்றுதல், ஷேர் மார்க்கெட், போன்றவற்றுள் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

குரு :

வக்கீல், நீதிபதி, வங்கித் துறை, அறக்கட்டளை நிறுவுதல், தர்மகர்த்தா, ஆசிரியர், ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, தங்க நகை வியாபாரம், ஆலயப் பணிகள், கோயில் நிர்வாகம் போன்றவற்றுள் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

சுக்கிரன் :

ஜவுளித் துறை, நகைக்கடை, திருமண மண்டபம், டிராவல் ஏஜென்ஸி, கட்டிடக்கலை, நாடகம், சினிமா, ஓட்டல், மாட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, வாசனை திரவியங்கள் விற்பனை, தயாரிப்பாளர் போன்றவற்றுள் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

சனி :

மண்பாண்டத் தொழில், எள், எண்ணெய் வியாபாரம், பாரம் தூக்குதல், சவரம் செய்தல், விவசாயம், கசாப்புக்கடை, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், அரசியல் ஈடுபாடு, சேவை செய்தல், மரவேலை போன்றவற்றுள் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

ராகு :

ஆகாய விமானம், வேதியியல் ரசாயனங்கள் தயாரித்தல், தொழில்நுட்ப துறை, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட தொழில்கள், கமிஷன் வியாபாரம், உரம், பூச்சி மருந்து தயாரித்தல் போன்றவற்றுள் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

கேது :

சித்த மருத்துவம், லேகியம் தயாரிப்பு, மாந்திரீகம், மருத்துவம், ஆன்மிகம், களிம்புகள் தயாரித்தல் போன்றவற்றுள் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad