![]() |
ஜென்ம நக்ஷத்திரம் |
ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!
ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறோமோ அதுதான் ஜென்ம நட்சத்திரம். ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அது தான் அவரது ஜென்ம நட்சத்திரமாகும். ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி இருப்பார் என்பதை நிர்ணயம் செய்வதே ஜென்ம நட்சத்திரம் தான். அதனால்தான் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை :
- புதிதாகக் கல்வி கற்றல்
- உயர் பதவி ஏற்பு
- அசையும் அசையா சொத்துக்களை பார்வையிடுதல்ஃவாங்குதல்
- பத்திரம் பதிவு செய்தல்
- யாகங்கள் செய்தல்
- அன்னதானம்ஃதர்ம காரியங்கள் செய்தல்
- உபநயனம் செய்தல்
- கிரப்பிரவேசம் செய்தல்
- நோயாளிகள் முதன்முதலாக மருந்து எடுத்துக்கொள்ளுதல்
- தம்பதியருக்குத் திருமணம் செய்வித்தல்
- திருமணம் ஆன பெண்ணுக்கு சீமந்தம் செய்தல்
- சாந்தி முகூர்த்தம் செய்தல்
- காது குத்துதல்
- முடி இறக்குதல்
ஜோதிட சாஸ்திரப்படி, பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்கள் உடைய நாள்களில் செய்யக்கூடாதவை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவை :
- கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது
- நெடுந்தூரப் பயணம் செல்லக்கூடாது
- பெரிய அறுவைச் சிகிச்சை செய்யக்கூடாது
- முக்கியமான எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.