இன்றைய உலகில் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மில் பலரால் காலத்தின் வேகத்திற்கு ரூடவ்டுகொடுத்து ஓடமுடியாததால் கஷ;டம் என்கின்றனர். அதற்கு அவர்கள் கேட்கப்படும் கேள்வி... கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்?
மனிதன் இறைவனையும், இயற்கையையும் புரிந்து கொள்ளாத போது தான், சுகத்தை மட்டுமே விரும்பி ஏற்றுக் கொண்டு, கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்வது.
கடவுள் தன்னால் படைக்கப்பட்ட எந்த உயிரினங்களையும் சோதிப்பது கிடையாது. அவர் மனிதனின் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். மேலும் அவர் இறைவழிபாடு மூலம் தன்னுடைய சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் வழங்கியுள்ளார். நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறொன்றும் கிடையாது.
மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது ஏன் என்ற வார்த்தையே கிடையாது!.
- வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது,
- தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது
அது போல நல்லவர்கள் சோதனைகளுக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிர காயப்படுத்தாது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கஷ;டத்திலோ அல்லது சந்தோஷத்துடனோ மட்டும் வாழ்ந்து மடிந்தவர்கள் யாரும் இங்கு கிடையாது.
கஷ்டம், துன்பம் அனுபவிக்கும் யாரையும் கடவுள் அப்படியே விட்டுவிடுவதில்லை. ஒரு மனிதனுக்கு விதிக்கப்பட்ட தடைக்கற்களை அவன் கடந்து வரும் போது அந்த போராட்டங்களின் மூலம் அவனுடைய சகிப்புத்தன்மை, மனவலிமை போன்றவற்றை அதிகரிக்க செய்யும். சோதனைகள் என்பது மனதிடத்தை அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்வு ஆகும்.
நாம் கடவுளைக் காண முடியாத சோதனை வேளைகளில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையும், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.
உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சிகளும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.
- கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்.
- நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்.
- வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
- கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்.
- பயத்தைக் கலைத்து நம்பிக்கையை தக்க வையுங்கள்.
- சந்தேகங்களை நம்பாதீர்கள்.
- நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.
- உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.
- கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்...!