ருத்ராக்ஷம் பயன்படுத்தும் முறையும் பராமரிக்கும் முறையும்
அக்கால மணி மாலைகளில் மணிக்கு கவசம் வைத்து கட்டாமல் ஒவ்வொரு மணிக்கு நடுவிலும் பேய்ச்சுரை குடுக்கை யால் செய்த வில்லைகள் வைத்தே மணி மாலைகள் கட்டப்பட்டது
முதன்முதலாக கட்டிவந்த ருத்ராட்ச மாலைகளை சுத்தம் செய்து சாமியிடம் வைத்து பூஜை செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவாச்சாரியார்கள் மகான்கள் குருமார்கள் தாத்தா பாட்டி அம்மா அப்பா மற்ற பெரியோர்களின் கையால் ஆசிபெற்று மாலையை அணிந்து கொள்ள வேண்டும் அதன்பிறகு தினசரி சாதாரணமாக நாமே அணிந்து கொள்ளலாம்
ருத்ராட்ச மணி மாலைகளை நாம் அணியாத சமயங்களில் அதனை மிகவும் பக்தியுடன் ஒரு இடத்தில் வைத்து பொன் நகைகளை விட மேலாக பாதுகாக்கவேண்டும் இதனை போட்டு வைப்பதற்கு பட்டுத் துணியால் தைத்த சுருக்குப்பை மண்பாத்திரம் சுரைக் குடுக்கை தேங்காய் கூட்டு பாத்திரம் தூய மரங்களால் ஆன பெட்டி மற்றும் வெள்ளி தங்க பேழைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் வேறுவகையான பொருட்களில் வைக்கக்கூடாது
பொட்டு நூலில்தான் ருத்ராக்ஷ மணிகளை கோர்த்து அணிய வேண்டும் இயலாதவர்கள் பருத்தி இலைகளிலும் கோர்த்து அணியலாம் 21 இலைகளை எண்ணி சிவ மந்திர ஜெபம் செய்தபடி முறுக்கேற்றி அதில் ருத்ராட்ச மணிகளை கோர்த்து பூஜித்து பின்பு அணியவேண்டும் பட்டு நூல் போல் இது சிறந்தது இல்லை
ருத்ராட்சம் மணி மாலைகளை உடலில் அணிந்து கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன அவற்றை இங்கே பார்ப்போம்
ருத்ராட்சம் மணிமாலைகள் மீது மிகக் கடினமான ரசாயன கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி அதனை சுத்தம் செய்யக்கூடாது மாறாக பாரம்பரிய முறைகளிலேயே அதனை கழுவ வேண்டும்
வேண்டுமானால் இளம் சூடான வெந்நீரில் ருத்ராக்ஷ மணிகளை சுத்தம் செய்யலாம் அதிக காரமில்லாத குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப் மற்றும் ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்தினால் அதிகமான பாதிப்பு இராது மணிகளை தேய்த்து கழுவ குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிருதுவான பல் தேய்க்கும் பிரஷ் பயன்படுத்தலாம்
கழுவிய ருத்ராட்ச மணிகளை பருத்தி துணியால் துடைத்து நீழலில் காற்றில் உலர விடலாம் அதன்பிறகு மணிகளின் மீது சந்தன எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை மிருதுவான ஓவியம் வரையும் தூரிகைகள் மூலம் தடவலாம்
ருத்ராட்ச மணி மாலைகளை உடலில் அணிந்து கொள்பவர்கள் உடல்முழுவதும் டால்கம் பவுடரை தூவிக் கொள்ளக்கூடாது இது ருத்ராட்ச மணிகளை பாதிக்கும் ஆனால் உடல் முழுவதும் விபூதி பூசிக் கொள்ளலாம்
உடலில் அதிக வியர்வை கொட்டாமல் அடிக்கடி நீரில் அமிழ்ந்து குளித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம் இது உடலுக்கும் நல்லது ருத்ராட்சம் மணிக்கும் நல்லது அதனால் மணிகள் நெடுங்காலம் வரை கெடாமல் இருக்கும்
ஏனென்றால் ருத்ராக்ஷ மணிகளை முறையாக கவனமுடன் பராமரித்து பாதுகாத்தால் அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை பல தலைமுறைகளை கடந்தும் சேதமடையாமல் இருக்கும் மேலும் மந்திர சக்தி அதிகமாகும்
பூஜையில் பஞ்சகவியம் பஞ்சாமிர்தம் சந்தனம் அஷ்டகந்தம் அத்தர் புனுகு ஜவ்வாது போன்றவற்றை அவற்றின்மீது பயன்படுத்தினால் மணி கெடாது
விபூதி வைக்க விபூதிப் பை இருப்பது போல ருத்ராட்ச மணிகள் வைக்க ஒரு பட்டுப் பை தைத்து வைத்துக் கொள்ள வேண்டும் ருத்ராட்சம் அணியாத காலங்களில் அவற்றை இப் பையில் கழற்றி வைத்து பாதுகாக்கலாம் மேலும் சுரைக் குடுக்கை மரப்பெட்டி வெள்ளி பெட்டி தங்க பெட்டி போன்றவைகளிலும் வைத்துக்கொள்ளலாம் சிவாய நம