ருத்ராட்ச மணி மாலைகளில் வகைகள் இப்பொழுது பார்ப்போம்
ருத்ராட்ச மணி மாலைகளில் அதை கட்டும் முறைகளிலும் மணிகளின் எண்ணிக்கை மணியின் முகம் போன்றவற்றை வைத்து இன்று பல்வேறு வகை ருத்ராட்ச மாலைகள் உருவாக்கப்படுகின்றது அவற்றை இங்கே பார்ப்போம் 1 சிவ மாலை 2 கௌரி மாலை 3 அர்த்தநாரீச மாலை 4 நாராயண மாலை 5 லட்சுமி மாலை 6 சரஸ்வதி மாலை 7 கார்த்திகேய மாலை 8 அனுமன் மாலை 9 நவகிரக மாலை 10 நட்சத்திர மாலை 11 சித்த மாலை 12 இந்திர மாலை 13 புத்தி மாலை 14 தார்மிக மாலை என்று அவற்றை பல வகைகளாக வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் இவை தற்காலத்தில் ருத்ராட்ச கண்காட்சிகளில் கிடைக்கும் மணிமாலை வகைகளாகும் மேற்கண்ட மாலை களுக்கான மணிகளின் விபரங்களையும் அதற்கான பலன்களையும் இப்பொழுது பார்ப்போம்
1.சிவமாலை
மூன்று பெரிய வகை ருத்ராட்சங்களை கொண்டு கட்டப்படுவது இது இதில் ஒரு நான்கு முக ருத்ராட்சம் ஒரு ஐந்து முக ருத்ராட்சம் ஒரு ஆறு முக ருத்ராட்சம் சேர்ந்து கட்டப்பட்ட மாலை இந்த மாலையே சிவமாலை எனப்படும் இதனை அணிவதால் சிவனின் பேரருள் கிட்டும் இன்னல்கள் கஷ்டங்கள் நம்மை விட்டு விலகும்.
2. கௌரி மாலை
இந்த மாலையும் மூன்று ருத்ராட்சங்கள் இணைந்தவை இதில் 2 இரண்டு முக ருத்ராட்சம் மற்றும் ஒரு பதிமூன்று முக ருத்ராட்சமும் சேர்ந்து கட்டப்பட்டிருக்கும் இதில் இருமுகம் சிவசக்தி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் அம்சம் பதிமூன்று முகமணி மன்மதனின் அம்சம் இதனை அணிவதால் தம்பதிகளின் ஒற்றுமை பலப்படும் குழந்தை பேரருள் கிட்டும்
3 அர்த்தநாரீச மாலை
இவ்வகை மாலைகள் 5 ருத்ராட்சங்கள் சேர்த்து கட்டப்பட்டவை ஆகும் இதில் 2 இரண்டு முக மணியும் இரண்டு ஆறுமுகம் மணியும் ஒரு ஏழு முக மணியும் கட்டப்பட்டிருக்கும் இதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய பயன்படுத்தலாம் இதனை அணிவது குடும்பத்தில் மிகவும் வயதானவர்கள் அணியவேண்டும் இதனால் குடும்பத் தலைவருக்கு பாதுகாப்பு அவர் குடும்பத்தை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
4 நாராயண மாலை
ஐந்து ருத்ராட்சங்கள் இணைந்த மாலை இது ஒரு நான்கு முக மணியும் ஒரு ஐந்து முக மணியும் ஒரு ஆறுமுகம் மணியும் ஒரு எட்டு முக மணியும் ஒரு பத்து முக மணியும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் ஒரு இடத்திற்கு காரிய நிமித்தமாக செல்பவர்கள் இதனை அணிந்தால் செல்லும் காரியம் வெற்றி ஆகும்
தொடர்ச்சி அடுத்த பதிவில் பாப்போம்.