ருத்ராக்ஷ முகங்களும் பலன்களும்
- 9 முக ருத்திராட்சம் ஒன்பது முகம் கொண்ட மணிகள் கூட அவ்வளவாக கிடைப்பதில்லை கயிலை மலையின் என் திசைகளிலும் காவல் புரியும் தேவதைகளான அசிதாங்க பைரவர் குரு பைரவர் சண்ட பைரவர் குரோத பைரவர் உன்மத்த பைரவர் கபால பைரவர் பீஷண பைரவர் சம்ஹார பைரவர் என்ற அஷ்ட பைரவர்களின் உற்பத்திக்கு மூலகாரணமான ஸ்ரீ மகா பைரவர் ஸ்வரூபம் ஆகும் இந்த ஒன்பது முக ருத்ராட்சம் இதன் கிரகம் கேது இதனை அணிவதால் பில்லி சூனியம் விலகும் பல்வகை கொலை பாவங்கள் நசிக்கும் பாம்புகளால் வரும் துன்பங்கள் நீங்கும் நவ கிரக பீடைகள் விலகி நவ சக்திகளின் பேரருள் கிடைக்கும் சித்தியும் முத்தியும் ஏற்படும் இந்த மணியை இடது கை மணிக்கட்டில் அணிய வேண்டும்
- 10 தசமுக ருத்ராட்சம் பத்து முகம் இம் மணிகள் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம,கிருஷ்ண, கல்கி அவதாரங்களின் நாயகனான ஸ்ரீ விஷ்ணு ஸ்வரூபம் ஆகும் இவற்றை அணிவதால் பூத பிரேத பைசாச பிரம்ம ராட்சஸர்கள் ஆல் ஏற்படும் ஆபத்துகள் விலகும் ஏவல் பில்லி சூனியங்கள் வலுவிழந்து போகும் பலவகையான பீடைகளிலிருந்து காப்பாற்ற படுவீர்கள் மிருகங்களால் வரும் ஆபத்துகள் விலகும்
- 11 ஏகாதசி முக ருத்ராட்சம் இந்த பதினோரு முகம் கொண்ட மணிகளும் அபூர்வமானவை ஆகும் எளிதில் கிடைக்காததை, இவகை மணிகள் மகாதேவன் அரண் ருத்திரன் சங்கரன் நீலலோஹின் ஈசானன் விஜயன் வீமதேவன் பவோற் பவன் கபாலி சௌமியன் என்ற ஏகாதச ருத்ரர்களின் அம்சம் இந்த பதினோரு முக ருத்ராட்சம் இவற்றை அணிந்து கொண்டாள் பலவகை உயிரினங்கள் பறவைகள் என பிராணிகளைக் கொன்ற பாவம் நீங்கும் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள அஸ்வமேத யாகம் முதலான அனைத்து விதமான யாகங்களையும் விரதங்கள் பூஜைகளையும் செய்த புண்ணியம் ஏற்படும் 100 வாஜ பேய யாகம் செய்த புண்ணியம் வரும் சிவஞானம் ஏற்பட்டு சிவகதியை அடைவர்
- 12 துவாதச முக ருத்ராக்ஷம் 12 முகமுடைய இம் மணிகள் மிகவும் அரிதானவை இவ்வகை மணிகள் வைகர்த்தன், வைவஸ்வதன் வாசன் , மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப் பிரகாசன், லோக சாக்ஷி, திரிவிக்ரமன், ஆதித்யன், திவாகரன், அங்கிசமாலி, என்னும் துவாதச ஆதித்தியர்கள் இன் ஸ்வரூபம் ஆகும் இவை 12 தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் வரும் 12ல் சூரியன் பெயர்கள் ஆகும் இவ்வகை மணிகளை அணிவதால் பல வகையான கொலை பாதகங்கள் தீர்ந்து நல்ல மனோ நிலை ஏற்படும் தங்கத்தை தானம் செய்த புண்ணியம் வரும் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்த புண்ணியம் கிட்டும் கல்வி மேம்படும் அறிவியல் தெளிவு உண்டாகி சிவஞானம் ஏற்படும் நினைத்தது கைகூடும்
- 13 திரயோதச முக ருத்ராட்சம் 13 முக ருத்ராட்சம் மிகவும் அரிது இவை ஸ்ரீ சுப்ரமணியர் ஸ்வரூபம் ஆகும் இதன் பிரதி தேவதை காமதேவன் இவை எளிதில் கிடைக்காதவை இதனை அணிவதால் போக போக்கியங்களும் பலவகையான சித்தி சாதனைகளும் ஏற்படும் மேலும் குழந்தை மனைவி தாய் தகப்பன் சகோதரன் பெரியோர் மற்றவகை உறவினர்கள் குடும்பப் பெண்களை கொன்ற கொலை பாதகங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் கணவன் மனைவி உறவு பலப்படும் அனைத்து விருப்பங்களும் பூர்த்தியாகும் அதன்பின் நல்ல குணம் ஏற்பட்டு சிவகதி பெறுவர்
- 14 சதுர்தச முக ருத்ராட்சம்* இந்த பதினான்கு முக மணிகள் மிக மிக அரிது இது சிவசக்தி வடிவானவை இதனை அணிந்து கொள்வதால் சகல பாவங்களும் நசிந்து சிவஞானம் உண்டாகும் தேவர் முனிவர்களையும் வசப்படுத்தும் இவ்வகை மணிகளை அணிவதால் சகல வியாதிகள் விலகி சுகம் ஏற்படும்